லவ் யாட் பிளாஸா விவகாரத்தில் தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை என்றும் இன இணக்கத்தைக் கட்டிக்காக்க அச்சட்டம் தேவை என்பதைக் காண்பிப்பதற்காகவே அரசாங்கம் அச்சட்டத்தைப் பயன்படுத்துகிறது என்றும் பிகேஆர் கூறியது.
ஜூலை 12-இல் கோலாலும்பூர் புக்கிட் பிந்தாங் சம்பவம் தொடர்பில் ஆயுதப் படை முன்னாள் மலாய் ஊழியர் சங்கத் தலைவர் முகம்மட் அலி பஹோரோம் போன்றோர்மீது நடவடிக்கை எடுக்க வேறு எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன என்று பிகேஆர் உதவித் தலைவர் என். சுஎர்ர்ந்திரன் கூறினார்.
“இன இணக்கத்தை நிலைநிறுத்த அக்கொடிய சட்டம் தேவை என்பதைக் காண்பிப்பதற்காகவே அம்னோ- ஆதரவு சமூக ஆர்வலரான முகம்மட் அலி பஹோரோம்மீது தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்படுகிறது.
“உண்மையில் இதற்கு தேச நிந்தனைச் சட்டம் தேவையில்லை. அமைதியைக் கட்டிக்காக்க குற்றவியல் சட்டங்கள் நிறைய உள்ளன”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
அட கூரு கெட்ட மத வெறியன்களா அதே மற்ற இனத்தவர் பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும் ஜனநாயகம் எங்கே போய்கொண்டிருக்குது?????????????
அம்பிகா வீட்டின் முன் பிண்டத்தை காட்டி அருவருப்பாக நடந்துகொண்டவர் இவர். அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.
இப்பொழுது நடவடிக்கை என்பது அது ஒரு நாடகம் என்பது யாவரும் அறிந்ததே. இன்னும் இந்நிலை தொடர்ந்து இருந்தால் சிங்கப்பூர் வளர்ச்சி நிலை எந்த காலத்திலும் அடைய முடியாது.மலேசியா பின் தங்கிய நிலையிலேயே இருக்கும்.