1மலேசியா மேம்பாட்டு நிறிவனம் பற்றி மேலும் பல விசயங்களை சரவாக் ரிப்போர்ட் வெளிச்சத்துக்குக் கொண்டுவரலாம் என மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) அஞ்சுகிறதா?
தனது இணையத்தளத்தை அரசாங்கம் முடக்கி வைத்திருப்பதைப் பார்க்கையில் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது என சரவாக் ரிப்போர்ட் கூறியது.
அந்த முடக்கம் 1எம்டிபி ஊழலை வெளிப்படுத்துவதைத் தடுக்கும் “அப்பட்டமான முயற்சி” என சரவாக் ரிப்போர்ட் கூறியது. யுஎஸ்700 மில்லியன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்ட தகவல் உலக அளவில் பல செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்ட ஒன்றுதான் என்பதை அது சுட்டிக்காட்டியது.
“ஆக, மேலும் பலவற்றை நாங்கள் வெளிப்படுத்துவோம் என்ற பயம் எம்சிஎம்சி-க்கு வந்துவிட்டது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது”.
அதனால்தான் ஊடகங்களின் வாயைக் கட்டிப்போட இப்படிப்பட்ட கடுமையான நடவடிக்கையைக் கைக்கொண்டிருக்கிறார்கள் என சரவாக் ரிப்போர்ட் கூறியது.
நேற்று எம்சிஎம்சி ஓர் அறிக்கையில், அந்த இணையதளம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிட்டதற்காக தற்காலிகமாக முடக்கப்படுவதாக தெரிவித்தது..
1எம்டிபி விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அதன் விசாரணைகளை முடிக்கும் வரை அந்த இணையதளம் முடக்கப்பட்டிருக்கும் என்றும் எம்சிஎம்சி அறிவித்துள்ளது.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை !
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை !
என்பதை அறியாத மட எருமைகளை என்னவென்று சொல்வது ?