இணையத்தள முடக்கம் பிரதமர் குற்றவாளி என்ற எண்ணத்தைத்தான் வலுப்படுத்துகிறது

kitசரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளம்  முடக்கப்பட்டிருப்பது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  குற்றவாளி  என்ற  எண்ணத்தை  வலுப்படுத்த  உதவுகிறது  என  டிஏபி  பெருந்தலைவர்  லிம்  கிட்  சியாங்  கூறினார்.

அந்த  இணையத்தளத்துக்குச்  செல்ல  முடியாமல்  தடுப்பதன்  மூலமாக  நஜிப்பும்  மலேசிய  தொடர்பு  மற்றும்  பல்லூடக  ஆணையமும் “மலேசியர்களுக்கும்   மற்றும் உலகத்தாருக்கும்  பிரதமர்  ஒன்றும்  குற்றமற்றவர்  அல்லர்  என்பதை  பறைசாற்றுவதுபோல  உள்ளது”, என்று  லிம்  கூறினார்.

சரவாக்  ரிப்போர்ட்டை  மலேசியர்கள்  மிகப்  பலர்  படிப்பதில்லை. ஆனால்,  எம்சிஎம்சி-இன்  நடவடிக்கை  அதற்கு  நல்ல  விளம்பரமாக  அமைந்துவிட்டது.   பிரிட்டனைத்  தளமாகக்  கொண்டுள்ள  அந்த  இணையத்தளத்தைக்  கண்டு  நஜிப்  பயப்படுகிறார்  என்பதை  அது  வெளிச்சம்போட்டுக்  காட்டி  விட்டது.

“யாரும்  பொய்யைக்  கண்டு  அஞ்சுவதில்லை, உண்மையை  எண்ணித்தான்  அஞ்சுவார்கள்”, என்றும்  லிம்  கூறினார்.