இஸ்மாயில் சப்ரி: கெட்ட பரப்புரைகளைத் தடுப்பது முக்கியம்

ismailசரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளத்தை  முடக்கிப்போட்ட  மலேசிய  தொடர்பு  மற்றும்  பல்லூடக  ஆணைய(எம்சிஎம்சி)  நடவடிக்கை,  நாட்டை  நிலைகுலையச்  செய்யக்கூடிய  தீய  பரப்புரைகள்  பரவுவதைத்  தடுக்கும்  என  விவசாய, விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  கூறினார்.

“அது  தடுப்பதுடன்  குற்றவியல்  சட்டம் தேச  நிந்தனைச்  சட்டம்,  எம்சிஎம்சி   சட்டம்  ஆகியவற்றின்கீழ்  சட்ட  நடவடிக்கை  எடுக்கவும்  கடுமையான  அபராதம்  விதிக்கவும்  முடியும்”, என  சப்ரி  அவரைத்  தொடர்புகொண்ட  பெர்னாமாவிடம்  தெரிவித்தார்.

நேற்று,  எம்சிஎம்சி,  தேசிய  பாதுகாப்புக்கு  மிரட்டலாக  உள்ளது  என்பதால்   சரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளத்தை  முடக்கி  வைப்பதாக  அறிவித்தது.

அந்த  இணையத்தளம்  உறுதிப்படுத்தப்படாத  தகவல்களை  வெளியிடுவதாக பொதுமக்கள்  புகார்  செய்ததை  அடுத்து  அதற்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்பட்டதாக  அமைச்சர் தெரிவித்தார்.