சரவாக் ரிப்போர்ட் இல்லையென்றால் என்ன கம்போங் ரிப்போர்ட் தொடங்குவோம்

musaபாஸின்  உதவிச்  செயலாளர்  ஹுசாம்  மூசா  1எம்டிபி  ‘பாவச்  செயல்கள்’ நாட்டின்  மூலை  முடுக்கெல்லாம்  பரவ  வேண்டும்  என  விரும்புகிறார்.  அதற்காக  அச்சடிப்பதற்காகவும்  விநியோகச்  செலவுக்காகவும்  ஒரு  நிதியை  ஏற்படுத்த  வேண்டும்  என்கிறார்  அவர்.

அந்த  ஊழல்  எல்லாருக்கும்  தெரிந்துவிடும்  எனப்  பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்  அஞ்சுவதால்  தகவல்  எல்லா இடங்களையும்  சென்றடைய  முயற்சிகளை  இரட்டிப்பாக்க  வேண்டும்  என்றாரவர்.

அத்தகவல்  சில  தரப்புகளை  இன்னும்  சென்றடையவில்லை  என்பதைச்  சுட்டிக்காட்டிய   அவர் அதற்காக  அச்சடித்த  அறிக்கைகளைத்  தயார்படுத்த  வேண்டும்  என்றார்.

“அச்சடிப்பதையும்  விநியோகத்தையும்  தொடங்க  வேண்டும். இதற்கு  ஓரளவு  செலவாகும். ஆனால், மக்கள்  எழுச்சி பெற  தகவல்  அவசியம்”, என்று  மூசா  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

செலவுகளைச்  சரிக்கட்ட  நிதி  தேவை  என்றும்  சிறப்பு  நிதி  ஒன்றை  அதற்காக  தொடங்க  வேண்டும்  என்றும்  அவர்  வலியுறுத்தினார். அப்படி  ஒரு  நிதி  தொடங்கப்பட்டால்  அதற்கு  முதல்  காணிக்கையாளராக  இருக்கவும்  அவர்  தயாராக  உள்ளார்.