தனியார் கணக்கில் வைக்கப்பட்ட பணம் தேர்தலுக்கு செலவிடப்பட்டது, மகாதிர் கூறுகிறார்

Monmoneyforpollsவங்கியில் தனியார் கணக்கில் வைக்கப்பட்டிருந்த பணம் கடந்த பொதுத் தேர்தலுக்கு செலவிடப்பட்டது என்று அம்னோவிடம் கூறப்பட்டதாக மகாதிர் முகமட் தெரிவித்தார்.

“தனியார் கணக்கில் பணம் வைக்கப்பட்டது மறுக்கப்படவில்லை. அது தேர்தல்களுக்கு என்று அம்னோவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அம்னோ திருப்தியடைந்துள்ளதாகத் தெரிகிறது.

“ஓர் அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெற உதவுவதற்கு அரசாங்கப் பணம் பயன்படுத்த முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாதா?, என்று அவரது வலைத்தளத்தில் கேட்டுள்ளார்.

“ஆனால், அந்தப் பணம் நன்கொடையிலிருந்து பெறப்பட்டது. யார் ரிம2 பில்லியன் நன்கொடையளித்தது? பதில் இல்லை”, என்று மகாதிர் மேலும் கூறுகிறார்.

எவருடைய வங்கிக் கணக்கு என்று மகாதிர் திட்டவட்டமாக கூறாவிட்டாலும், அகுறிப்பிட்டிருப்பது பிரதமர் நஜிப் ரசாக்கைதான் என்று நம்பப்படுகிறது.

WSJ வெளியிட்டிருந்த அதன் அறிக்கையில் ரிம2.6 பில்லியன் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.