போலீசார் லெஸ்டரிடம் வாக்குமூலம் பதிவு

lesterசரவாக்  ரிப்போர்ட்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குற்றவாளியாகக்  காண்பிப்பதற்காக  பொய்ச்சாட்சியங்களை  உருவாக்கியது  என்று  கூறிய  லெஸ்டர்  மெலான்யியிடம்  பொலீசார்  வாக்குமூலம்  பதிவு  செய்தனர்.

லெஸ்டரிடம்  வாக்குமூலம்  பதிவுசெய்ய  புக்கிட்  அமான்  போலீசார்  ஜூலை  17, 18-இல்  கூச்சிங்  வந்தார்கள்  என சரவாக்  போலீஸ்  ஆணையர்  முகம்மட்  சப்து ஒஸ்மான்  தெரிவித்தார்.

“பல  கணினிகளையும்  அவர்கள்  எடுத்துச்  சென்றனர். ஆனால், யாரையும்  கைது  செய்யவில்லை”, என்றவர்  பெர்னாமாவிடம்  கூறினார்.

கடந்த  புதன்கிழமை  காணொளி  வாக்குமூலம்  வழங்கியிருந்த  லெஸ்டர், தான்  சரவாக்  ரிப்போர்டில்  வேலை  செய்ததாகவும்  வேலை  செய்த  காலத்தில்  1எம்டிபி-க்கு  எதிரான  தகவல்களைப்  புனைவதற்கு  உதவியதாகவும்  கூறிக்கொண்டார்.

சரவாக்  ரிபோர்டில்  வெளிவந்த  1எம்டிபி  பற்றிய  தகவல்களில்  10  விழுக்காடு  மட்டுமே   சேவியர்  எண்ட்ரி   ஜஸ்டோ  கொடுத்தவை  என்று  லெஸ்டர்  கூறினார்.

ஏனைய  90  விழுக்காடு ‘எதிரணியினரா’ல்  புனையப்பட்டதாம்.