கேஎல்ஐஏ2 கட்டி முடிக்கப்பட்டதும் தொடக்கத்தில் அங்கு செல்ல ஏர் ஏசியா மறுத்தது. அதற்காக அது குறைகூறப்பட்டது. அது மறுத்ததற்கான காரணம் இப்போதுதான் தெரிய வந்துள்ளது. அந்த விமான நிலையத்தில் பிரச்னைகள் இன்னும் தீரவில்லை.
இதை ஏர் ஏசியா தலைமை செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் டிவிட்டரில் குறிப்பிட்டு வருத்தப்பட்டிருக்கிறார்.
“ஓராண்டுக்குப் பிறகு இன்னமும் பழுதுபார்க்கும் வேலை நடக்கிறது.
“அப்போதே சொன்னோம். அதை யாரும் கேட்கவில்லை. எவ்வளவு பணம் வீணாகி விட்டது”, என்றவர் பதிவிட்டிருந்தார்.
பெர்னாண்டஸ் கேஎல்ஐஏ2 என்று குறிப்பிடவில்லையே தவிர கேஎல்ஐஏ2-இன் வான்கலம் செல்லும் பாதையில் பழுதுபார்க்கும் வேலைகள் நடப்பதைப் போன்ற படமொன்றைப் பதிவிட்டிருந்தார்.
பணம் வீணாகி விட்டது பற்றி அம்னோ அரசாங்கம் கவலைப்பட தயாராயில்லை! கேட்டால் உங்கள் அப்பன் ஊட்டுப் பணமா என்பார்கள்! வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்!
அனைத்து பள்ளிகளிலும், அனைவரும் தமிழ் மொழியை கட்டாயமாக பயில வேண்டும் என்று அன்றே அரசாங்கம் கொள்கை வகுத்திருந்தால், “செய்வதை திருந்த செய்” என்பதற்கிணங்க KLIA2 விவகாரம் மட்டுமின்றி, தற்போதைய 1MDB கொள்ளை விவகாரத்திலும் மாட்டி கொள்ளாமல் இருந்திருப்பார்கள். என்ன செய்வது “சொந்த புத்தியும் இல்லை ; சொல் புத்தியும் இல்லை”.
இப்போது சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள்!
ஐயா உங்கள் கருத்து கேட்க படவில்லை என்பது ஜகர்தாவிற்கு உங்கள் அலுவலகம் மாறி சென்றது தெரிகிறது. நீங்கள் என்னதான் சொன்னாலும் கேட்பார் இல்லை. திறமையானவர்களை ஒதுக்குவதால் சிங்கப்பூர் வளர்ச்சி நிலை அடைய முடியாத நிலையாகி விட்டது.
எல்லாம் ஊழல் –இதுதான் மலேசியாவின் திறமையாட்சே!. மேல்;இருந்து கீழ் வரைக்கும் இந்தியாவைப்போல். சிங்கபூராக இருந்திருந்தால் அந்த நிறுவனம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும் அத்துடன் ஊழல்வாதியாக இருந்தால் கம்பி எண்ண வேண்டி இருக்கும்– அதிலும் அரசியல் வாதிகள் 99% சம்பந்தப்பட்டு இருக்க மாட்டார்கள். இந்த காரணத்தினால் தான் வெளி நாட்டு முதல் ஈடுகள் அதிகம் — தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று வெளி நாட்டவர்களுக்கு புரியும்.