1எம்டிபிமீதான விசாரணைக்கு உதவியாக நிர்வாக இயக்குனர் ஒருவர் ஐந்து நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஒரு ‘டத்தோ’என்று கூறப்படுகிறது.
அவர், 1எம்டிபி பணக்கையாடலை விசாரணை செய்துவரும் சிறப்புப் பணிக்குழு கைது செய்துள்ள இரண்டாவது நபராவார்.
1எம்டிபி விவகாரம் தொடர்பில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒரு நிறுவனத்தின் இயக்குனரான அவர் கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு நான்கு நாள்களுக்குக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.