1எம்டிபி-இல் நிதிமுறைகேடு மீதான விசாரணைக்கு உதவியாக சிங்கப்பூர் போலீஸ் இரண்டு வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.
“ஜூலை 15, 2015-இல் விசாரணை தொடர்பான அந்த இரண்டு வங்கிக் கணக்குகளில் பண பட்டுவாடா நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் குற்றவியல் சட்டத்தின் கீழ் நாங்கள் தடை விதித்தோம்”, என சிங்கப்பூர் போலீஸ் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
விசாரணை தொடர்வதால் அவ்விரு வங்கி கணக்குகளின் அடையாளத்தையோ வங்கியின் பெயரையோ சிங்கப்பூர் போலீசார் வெளியிடவில்லை.
1எம்டிபி பேச்சாளர் ஒருவரை அணுகியதற்கு அவர் கருத்துரைக்க மறுத்தார்.