ஆஸ்திரேலியாவில் சொத்து வாங்கியதில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுவதால் மாரா வெளிநாடுகளில் சொத்து வாங்குவதை நிறுத்திக்கொள்ள முடிவு செய்திருப்பதாக அதன் முன்னாள் தலைவர் அனுவார் மூசா கூறினார்.
மாரா அதன் கடன்களை அடைப்பதற்காக சொத்துகள் சிலவற்றை விற்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
“வெளிநாடுகளில் சொத்து வாங்குவதைத் தொடர வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.
“நாங்கள் வாங்கிய சொத்துகளுக்கு நல்ல விலை கிடைக்குமானால் அவற்றை விற்பதற்கும் தயாராக இருக்கிறோம்”, என்றாரவர்.
அந்த வகையில் மாரா லண்டனில் உள்ள ஏஷ்லி ஹவுசை விற்க முடிவு செய்துள்ளது. அதை விற்பதால் அதற்கு 20 விழுக்காடு ஆதாயம் கிடைக்கலாம்.
ஆனால், ஆஸ்திரேலியாவில் உள்ள அதன் சொத்துகலை மாரா விற்காது. டட்லி இண்டர்நேசனல் ஹவுஸ் மீதும் இதர மூன்று சொத்துகள் மீதும் ஊழல்-தடுப்பு ஆணையம் விசாரணை செய்து வருவதால் விசாரணை முடிந்த பின்னரே அவை விற்கப்படும் என அனுவார் கூறினார்.
மாரா தலைவராக இருந்த அனுவாரின் ஈராண்டுப் பதவிக் காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
சேர்க்க வேண்டியதை சேர்த்தாகி விட்டது . இனி என்ன விற்க வேண்டியதுதானே….
முழுக்க முழுக்க நனைய்ந்த பின்னே முக்காடு எதற்கு ?
மக்கள் பணத்தில் வாங்கப்பட்ட மாராவின் சொத்துக்கள் விற்கப்பட்டு ,,அதன் பின் அப்பணம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுமா,,, அல்லது சிலரின் சொந்த கணக்கில் சேர்க்கப்படுமா ??????அக்பருக்கே வெளிச்சம் ,,,
மாரா-வின் சொத்துக்களை விற்று கடனை அடைப்பதாக கூறி, சம்பாதிக்க போகும் அந்த அதிர்ஷ்டசாலி UMNO பிரமுகர் யாரோ ?