புவா மற்றும் ரபிஸி நாட்டை விட்டு வெளியேற தடை

Puaandrafi

1எம்டிபி விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டோனி புவாவும் ரபிஸி ரமலியும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு உறுப்பினருமான டோனி புவா இன்று கேஎல் எ2 இல் இமிகிரேசன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்தோனேசியா, ஜோக்ஜாக்கர்த்தாவுக்கு செல்வதற்காக அவர் விமானநிலையத்திற்கு சென்றதாகவும், அங்கு தடுத்து நிறுத்தப்பட்ட போது ஏன் என்று வினவியதற்கு “மேலிடத்து உத்தரவு” என்று இமிகிரேசன் அதிகாரி பதில் அளித்ததாக புவா மலேசியாகினியிடம் கூறினார்.

ரபிஸிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

தானும் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற தடை வித்திக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக ரபிஸி கூறினார்.