“சூத்திரதாரி” மகாதிருக்கு இன்னும் பயணக் கட்டுப்பாடு ஏதும் இல்லை

 

Travel Banபிரதமர் நஜிப் ரசாக்கை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டுக்கு எவ்வித பயணக் கட்டுப்பாடும் இதுவரையில் விதிக்கப்படவில்லை.

இமிகிரேசன் இலாகா வலைத்தளம் அவரது பயணத் தகுதிக்கு எவ்விதத் தடையும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

1எம்டிபி விவகாரம் காரணமாக மகாதிர் தொடர்ந்து பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும். அவர் பதவியில் தொடர்ந்தால், அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசான் தோல்வி அடையும் என்று கூறியுள்ளார்.

ஆனால், மகாதிர் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்படுவது சாத்தியமே என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.

இதுவரையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான டோனி புவா, ரபிஸி ரமலி மற்றும் த எட்ஜ் ஊடகக் குழுமத்தின் உரிமையாளர் தோங் கூய் ஓங் ஆகியோருக்கு எதிராக பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.