எம்சிஎம்சி: ஆதாரங்களில்லை; சரவாக் ரிப்போர்ட் முடக்கம் ஒரு தடுப்பு நடவடிக்கையே

mcmc1எம்டிபி தொடர்பில்  சரவாக்  ரிப்போர்ட்  வெளியிட்ட  தகவல்கள்  பொய்யானவை  என்பதற்கு  இதுவரை  ஆதாரம்  எதுவும்  இல்லை  என  மலேசிய  தொடர்பு  மற்றும்  பல்லூடக  ஆணையம்  கூறியது.

இன்று  புத்ரா  ஜெயாவில்,  மலேசியாகினி  உள்பட, இணைய  செய்தித்தளங்களின்  தலைமை  செய்தியாசிரியர்களைச்  சந்தித்த  எம்சிஎம்சி  கண்காணிப்பு மற்றும்  அமலாக்கத்  தலைவர்  சுல்கர்னைன்  முகம்மட்  யாசின்  இதைத்  தெரிவித்தார்.

சரவாக்  ரிப்போர்ட்  முடக்கப்பட்டிருப்பது  ஓரு  தடுப்பு  நடவடிக்கைதான்  என்றாரவர்.

அந்த  இணையத்தளத்தின்மீது  போலீஸ்  விசாரணை  நடைபெறுவதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

போலீஸ்  விசாரணை  முடிந்ததும்  அந்த  இணையத்தளத்துக்கான  தடையை  நீக்குவது  பற்றி  எம்சிஎம்சி பரிசீலிக்கும்.