‘காணாமல்போன’ எஸ்ஆர்சி நிர்வாக இயக்குனருக்குப் பயணத் தடை

missingநாட்டைவிட்டு  வெளியேறத்  தடை  விதிக்கப்பட்டிருப்பவர்களில் எஸ்ஆர்சி  நிர்வாக  இயக்குனர்  நிக்  பைசல்  அரிப்  நிக்  ஒஸ்மான்  கமிலும்  ஒருவராவார்.

.பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  சொந்த  கணக்குக்கு  ரிம2.6 பில்லியன்  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படும்  விவகாரத்தில் நிக்  பைசலுக்கும்  தொடர்புள்ளதாகக்  கூறப்பட்டுள்ளது.

1எம்டிபிமீது விசாரணை  நடத்திவரும்  சிறப்புப்  பணிக்குழு  அவரையும்  விசாரிக்க  விரும்புகிறது.  நிக்  பைசலும்  எஸ்ஆர்சி இயக்குனர்  சுபோ  முகம்மட்  யாசினும்  நஜிப்பின்  வங்கிக்  கணக்கு  தொடர்பாக  பணிக்குழுவிடம்  வாக்குமூலம்  அளிக்க  வந்திருக்க  வேண்டும்.

ஆனால், நிக்  பைசல், சுபோ  இருவருமே  காணாமல்  போய்விட்டதாக  த  சன்  அறிவித்துள்ளது. ஆனால்,  விசாரணைக் குழுவுக்கு  அணுக்கமான  வட்டாரங்களிலிருந்து  கிடைத்த  தகவலின்படி  அவர்களில்  ஒருவர் இந்தோனேசியாவில்  இருப்பதாக  த  சன்  கூறிற்று.  மற்றொருவர்  பற்றித்  தகவல்  இல்லை.

விசாரணைக்  குழு  தொழில் அதிபர்  ஜோ  லவ்-வையும் தேடி  வருவதாக  தெரிகிறது.

நேற்று, எஸ்ஆர்சி இண்டர்நேசனல்- உடன்  தொடர்புள்ள  நிர்வாக இயக்குனர்  ஒருவர்  கைது  செய்யப்பட்டு  1எம்டிபி  விசாரணைக்கு  உதவியாக  ஐந்து  நாள்  காவலில்  வைக்கப்பட்டார்.