1எம்டிபி பற்றிக் கூறப்படும் குற்றம்குறைகளை விசாரித்து வரும் சிறப்புப் பணிக்குழு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதா என்று பிகேஆர் எம்பி ரபிஸி ரம்லி வினவினார்.
இந்த விசாரணையில் முக்கியமான ஆள் நஜிப்தான் என்றாரவர்.
“நஜிப்பை விசாரிக்கவில்லை என்றால் அது பணிக்குழு சுதந்திரமாகத்தான் இயங்குகிறதா என்ற சந்தேகத்துக்கு இடமளிக்கும்”, என்று ரபிஸி ஓர் அறிக்கையில் கூறினார்.
நஜிப், 1எம்டிபி ஆலோசனை வாரியத்தின் தலைவராவார்.
பிரதமரின் சொந்த கணக்குக்கு ரிம2.6 பில்லியன் மாற்றிவிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தையும் பணிக்குழு ஆய்வு செய்து வருகிறது.


























பாசகுழு நஜிப்பை விசாரிக்கும் துணிச்சல் இருக்குமேயானால் அதிசயத்திலும்.அதிசயம்.1MDB முறைகேடுகளைப்பற்றிய கேள்விக்கு.
அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி என்ற ஒப்பாரி.
எல்லாம் ஒரே குடையில் ஊறிய மட்டைகள்–