தி எட்ஜ் வெளியீட்டாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்

edgeதி  எட்ஜ்  பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  1எம்டிபி தொடர்பான  செய்திகள்  தொடர்பில்  அதன்  வெளியீட்டாளர்  ஹோ  காய்  டேட்டை  போலீசார் விசாரணைக்கு  வருமாறு  கூப்பிட்டனுப்பினர்.

‘நாடாளுமன்ற  ஜனநாயகத்துக்குக்  கெடுதல்  செய்யக்கூடிய  செயல்களில்  ஈடுபட்டதற்காக’  குற்றவியல்  சட்டம்  பிரிவு   124-இன்கீழ்  அவர்மீது  விசாரணை  நடைபெறுவதாக  தெரிகிறது.

நேற்று  சில  போலீஸ்  வட்டாரங்கள்  தி  எட்ஜ்  ஊடகக்  குழுமத்தின்  உரிமையாளர்  தோங்  கூய்  ஒங்-கும்  இரண்டு  எதிரணி  எம்பிகளும்  குற்றவியல்  சட்டம்  பிரிவு  124-இன்கீழ்  விசாரிக்கப்படுவதாக  மலேசியாகினியிடம்  தெரிவித்திருந்தனர்.

பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்பிலியும்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  ஆகியோரே  அவ்விரண்டு  எம்பிகளும்  ஆவர்.

முன்னாள்  செய்தியாளர்  லெஸ்டர்  மெலான்யி, 1எம்டிபி-க்கு  எதிரான  ஆதாரங்கள்  எல்லாம்  இட்டுக்கட்டப்பட்டவை  என்று  கூறியதை  அடுத்து   இந்த விசாரணை   மேற்கொள்ளப்பட்டுள்ளது.