1எம்டிபி தொடர்பான ஆவணங்களைக் கொடுத்தால் பணம் தருவதாக பெட்ரோசவூதி தலைவர் சேவியர் எண்ட்ரி ஜஸ்டோவிடம் சொன்னது உண்மைதான் என்பதை தி எட்ஜ் ஊடகக் குழுமத் தலைவர் தோங் கூட் ஒங் ஒப்புக்கொண்டார்.
அந்த ஆவணங்களைப் பெறுவதற்காகத்தான் அப்படிச் சொன்னதாக அவர் கூறினார்.
“ஆம், அவரிடம் பொய்யுரைத்தோம். மலேசியர்களும் வெளிநாட்டவரும் அடங்கிய சிறு கும்பல் மலேசிய மக்களிடம் யுஎஸ்1.83 பில்லியனை ஏமாற்றியதற்கான ஆதாரங்களைப் பெற அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
“அவருடைய கூற்று நாங்கள் முன்பு சொன்னதை உறுதிப்படுத்துகிறது அதாவது நாங்கள் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை”, என்றவர் ஊடக அறிக்கை ஒன்றில் கூறினார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குக் கெடுதல் செய்யக்கூடிய செயல்களில் ஈடுபட்டதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 124-இன்கீழ் விசாரிக்கப்பட்டுவரும் தோங் சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸில் வெளியான ஜஸ்டோவின் நேர்காணல்மீது கருத்துரைத்தபோது இவ்வாறு சொன்னார்.
ஆனால், ஆவணங்களில் மாற்றங்கள் செய்து அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குத் திட்டம் போடப்பட்டிருந்ததாக ஜஸ்டோ கூறியிருப்பதை தி எட்ஜ் உரிமையாளர் மறுத்தார்.
வல்லவனுக்கு வல்லவன்.
பத்திரிகை துறையில் (investigative reporting) துப்புரவு செய்தி சேகரிப்பு என்று ஒரு பகுதி உள்ளது அமைச்சருக்கு நன்றாகவே தெரியும்!!உண்மையை வெளிக் கொணர பத்திரிகைகள் இவ்வாறான யுக்திகளை கடைபிடிப்பதில் தவறேதும் இல்லை. கிலி கொண்டோர் வேறென்ன செய்ய இயலும்?? உண்மை நிலவரமெல்லாம் அம்பலமானால் கூண்டோடு தொலைந்தோம் என்ற பயத்தில், செய்தி வெளியிட்ட பத்திரிகையை தடை செய்யும் நடவடிக்கை சந்தேகத்தை மென்மேலும் வலுப்படுத்துகிறது!!!கேள்வியே, edge பத்திரிகை வெளியிட்ட கூற்று உண்மையா இல்லையா என்பதே!! அதற்கான பதில் விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் இன்னும் தொண்டைக் குழியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது!!
எப்படியாவது இந்த ஊழலை பாய்க்கு அடியில் போட எல்லாவித அதிகார துஷ் பிரயோகங்களும் நடக்கிறது– புஸ் என்று போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை– இது தானே 58 ஆண்டுகளாக நடக்கிறது. கடைசியில் இது இன வெறியாட்டத்திற்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
நீதிமன்றம் ஏற்றி தி edge பத்திரிக்கையை கிழி கிழி என்று கிழிக்க வேண்டியதுதானே ? கிழிய போவது யாரு என்ற பயமோ ?