எம்ஏசிசி-யும் பணிக்குழுவும் சட்டத்தைமீறி நடந்து கொண்டிருப்பதாக ஷாபி சாடல்

shafee1எம்டிபி விசாரணை  தொடர்பில், சிறப்புப்  பணிக்  குழுவும்  மலேசிய  ஊழல்- தடுப்பு  ஆணையமும் (எம்ஏசிசி)  திங்கள்கிழமை  தம்  வாடிக்கையாளரை  கைது  செய்தது  சட்டத்தைமீறிய  செயல்  என  வழக்குரைஞர்  முகம்மட்  ஷாபி  அப்துல்லா  சாடியுள்ளார். கைது  செய்யப்பட்டவர்  இன்று  பிணையில்  விடுவிக்கப்பட்டார்.

கோலாலும்பூர்  அனைத்துலக  விமான  நிலையத்தில்  கைது  செய்யப்பட்ட  தம்  வாடிக்கையாளரிடம்,  சட்டவிரோதமாக  கைது  செய்ததற்காக  எம்ஏசிசிமீது  வழக்கு  தொடுக்குமாறு ஆலோசனை  கூறக்கூடும்  என  ஷாபி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“செய்த  குற்றம்  என்னவென்பதைச்  சொல்லாமலேயே  கைது  செய்திருக்கிறார்கள். அது  நியாயமல்ல.

“கொலைக்  குற்றதுக்காக  ஒருவரைக்  கைது  செய்தால்கூட  அவர்  யாரைக்  கொன்றார் என்பதைச்  சொல்ல  வேண்டும்”, என்ற  ஷாபி,  கூட்டரசு  அரசமைப்பில்  இந்த  உரிமைகள்  குறிப்பிடப்பட்டிருப்பதாகச்  சொன்னார்.

1எம்டிபி-யுடன்  தம்  வாடிக்கையாளருக்கு  “தொடர்பு  அறவே இல்லை”  என்றும்  அவர்  அரசாங்கத்துக்குச்  சொந்தமான  அந்த  நிறுவனத்திலிருந்து  விலகி  நீண்ட  காலமாகி  விட்டது  என்றும்  அவர்  குறிப்பிட்டார்.

“எம்ஏசிசியும்  சிறப்புப்  பணிக்குழுவும்  சட்டத்துக்கு  அப்பாற்பட்டவை  அல்ல”, என்றாரவர்.