தி எட்ஜ் நாளிதழுக்கும் வார இதழுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பது புத்ரா ஜெயா எதையோ மூடிமறைக்கப் பார்க்கிறது என்ற சந்தேகத்துக்கு வலுவூட்டுவதாக அமையும் என தேசிய மனித உரிமைக் கழகம் எச்சரித்துள்ளது.
1எம்டிபி பற்றி விரிவாக செய்திகள் வெளியிட்டு வந்த அவ்விரு செய்தித்தாள்களையும் தடை செய்திருப்பது பொதுமக்கள் அதைப் பற்றி விவாதிப்பதைத் தடுக்கும் முயற்சியாகும் என ஹகாம் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் ஓர் அறிக்கையில் கூறினார்.
நிதி அமைச்சுக்குச் சொந்தமான 1எம்டிபி-இலிருந்து வணிகர்கள் சிலர் பல பில்லியன்களைச் சுருட்டிக்கொண்டதாக அவ்விரு செய்தித்தாள்களும் குற்றம் சுமத்தியிருப்பது பொதுமக்களின் ஆர்வத்தைக் கிளறிவிட்டிருக்கிறது.
“அரசாங்கம் அக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விருப்பமின்றி அந்த ஊடகத்தை இழுத்து மூட முனைந்திருப்பது பெரிய- அளவில் ஊழல் நடந்திருக்கலாம் என்ற பொதுமக்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது”, என்றாரவர்.
வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரான அம்பிகா, அவ்விரு செய்தித்தாள்களுக்கும் தடை விதிக்கப்பட்டதற்கு அவை வெளியிடும் செய்திகள் “பாரபட்சமானவை” என்றும் “பொதுநலனுக்குக் கேடு விளைவிப்பவை” என்றும் அதிகாரிகள் கூறும் காரணங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்றார்.
“அரசாங்கம் தன்னிச்சையாக ‘பொதுஒழுங்கு’ என்ற கருத்தை முன்வைத்து அதன்பின்னே ஒளிந்து கொள்வதை அனுமதிக்க இயலாது. இதே காரணத்தைச் சொல்லித்தான் சில நாள்களுக்குமுன் சரவாக் ரிப்போர்ட் இணையத்தளமும் முடக்கப்பட்டது.
“அரசாங்கம் இரகசியங்களை வெளியிடுவோரை அடக்கி வைக்கக் கூடாது. மாறாக அவர்களை ஊக்குவித்து உண்மைகளைக் கண்டறிவதில் ஒத்துழைக்க வேண்டும். இதற்கு மாறாக நடந்துகொண்டால் அரசாங்கம்தான் ‘பொது மற்றும் தேசிய நலனை’க் கெடுக்கும் வகையில் நடந்துகொள்கிறது என்றாகி விடும்”, என்றாரவர்.
இங்கு இதுதான் ஜனநாயகம் .
வெறும் சந்தேகமா? மலேசிய அரசியலில் பெரும் சந்தேகம்!
பண நாயகத்தின் முன் ஜனநாயகம் எடுப்படாது!
சந்தேகம் என்று நாசுக்காக சொல்கின்ற மாதிரி தெரியுது. உண்மை என்று சொன்னால் ஆதாரம் என்று கேட்டு அவமான நஷ்யீடு வழக்கு போட்டுடுவாங்க என்று எங்களுக்கும் புரியுது.
தேள் கொட்டின திருடனை சத்தம் போட கூடாது என்று சொன்னால் எப்படி அம்மணி? திருடன் மண்டை கிர்ர்ன்னு சுத்தினா, சுத்த வச்சவன சும்மா விடுவார்களா அதிகார மமதையில் உள்ளோர்?
இங்கே நடப்பது பண நாயகம் , ஜனநாயகம் என்றோ செத்து விட்டது .
இதில் என்ன சந்தேகம்? இதுதான் எப்போதும் நடைபெற்று வருகிறதே- என்ன இப்போது கட்டுக்கு மீறி நடை பெறுகிறது–அத்துடன் அவன்களுக்குள்ளே இப்போது தகராறு அதுதான் இத்துனை அல்லோலகல்லோலம். நீதி தேவன் இன்னும் தூங்குகிறான்.
இதை யோசிக்க உங்கள் அளவுக்கு முளை எல்லாம் தேவை இல்லை. எந்த சட்ட புத்தகத்தையும் புரட்ட தேவை இல்லை. சாதரன் மக்களுக்கே இப்பொழுது புரிய தொடங்குகிறது.
BERSIH 4 க்கிற்கு எல்லோரும் தயாராகுங்கள் …..
மலேசியாவில் நீதி,நேர்மை,தர்மம்,நன்னெறி அழிந்துவிட்டது.மீண்டும் இறைவன் மனித அவதாரமெடுத்து மலேசியாவில் தர்மம்,நீதி,தழைக்க அருள்புரிவாராக.
ஜனநாயகம்,வெளிப்படையான நிர்வாகம்,சமத்துவம் அனைத்தும் முறையாக செயல்படுத்தியிருந்தால் இன்று சிங்கப்பூரை விட மலேசியா அதிக வளர்ச்சி முன்னெற்றம் அடைந்திருக்கும்.
நியாயம்கள் செத்து பல ஆண்டுகள் ஆகிறது , ஆளுக்கு ஒரு சட்டம் ,நல்லுக்கு ஒரு திட்டம் ………வரும் தலை முறை ???????