த எட்ஜுக்கு என்ஜிஒக்கள் மலர்க் கொத்துகள் அளித்து ஆதரவு தெரிவித்தனர்

 

FlowerstoEdgeஇன்று பல அரசு சார்பற்ற அமைப்புகள் (என்ஜிஒ-க்கள்) த எட்ஜ் ஊடகக் குழுமத்தின் அலுவலகத்திற்குச் சென்று  மலர்க் கொத்துகளை வழங்கி தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தன. த எட்ஜின் இரு வெளியீடுகளுக்கான உரிமைத்தை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

அந்த என்ஜிஓ-க்களின் சுமார் 20 பிரதிநிதிகள் மதியம் மணி 12.30 அளவில் த எட்ஜ் அலுவலகத்தில் கூடத் தொடங்கினர். அவர்கள் பூக்களையும் மலர்க் கொத்துகளையும் தங்களோடு கொண்டு வந்திருந்தனர். த எட்ஜிற்கு விதிக்கப்பட்டிருக்கும் இடைக்கால தடை உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் குரல் எழுப்பினர்.

த எட்ஜின் விற்பனைப் பிரிவு தலைமை நிருவாகி ஜொஹாரி அப்துல் ஜாப்பாரிடம் மலர்க் கொத்துகளையும் பூக்களையும் அவர்கள் வழங்கி தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

த எட்ஜ் நிறுவனத்தின் சார்பில் பூக்களையும் மலர்க் கொத்துகளையும் பெற்றுக் கொண்ட ஜொஹாரி ஆதரவுக்கு நன்றி கூறினார். அனைவரின் FlowerstoEdge1ஆதரவும் தேவைப்படுவதாக ஜொஹாரி மேலும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற என்ஜி-ஓக்களில் ஒன்றான கெராக்கான் மீடியா மாறா (ஜெராம்)-வின் பிரதிநிதி ராட்ஸி ரசாக் தாங்கள் மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை த எட்ஜின் அலுவலகத்தின்முன் கூடி தங்களுடைய ஆதரவை தெரிவிக்கப் போவதாக கூறினார்.

இன்று இங்கு கூடியது பூக்களும் மலர்க் கொத்துகளும் கொடுப்பதற்காக மட்டுமல்ல. இதன் மூலம் தங்களுடைய உளப்பூர்வமான ஆதரவை த எட்ஜுக்கு தெரிவிக்கிறோம் என்றாரவர்.

இந்த இடைக்காக தடையை தாங்கள் எதிர்ப்பதற்கான தலையாய காரணம் அது நியாயமற்றது என்பதோடு அது மலேசிய ஊடகத்துறைக்கு எதிரான தீய நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்று ராட்ஸி மேலும் கூறினார்.