பிகேஆர்: சரவாக் ரிபோர்ட் ஆசிரியருக்கு எதிரான ஸாகிட்டின் மருட்டல் நகைப்புகுரியது

 

Hamidi-laughable1எம்டிபியை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் வெளியிட்ட சரவாக் ரிப்போர்ட்டின் ஆசிரியர் கிளேர் பிராவ்ன் மலேசியாவுக்கு கொண்டு வரப்படுவார் என்று உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிடி நேற்று மருட்டல் விடுத்திருந்தார். அது சட்ட அடிப்படையற்ற ஒரு கூற்றாகும் என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் கூறினார்.

கிளேரை மலேசியாவுக்கு கொண்டுவர முடியும் என்று ஸாகிட் கூறியுள்ளது யுனைட்டெட் கிங்டம் மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளின் சட்டத்திற்கு பொருந்தாததாகும். அக்கூற்று நகைப்புக்குரியது என்றார் சுரேந்திரன்.

பல கோடி டாலர் நிதி ஊழல்களை அம்பலப்படுத்திய பிரிட்டீஷ் குடிமக்களில் ஒருவரான கிளேரை பிரிட்டீஷ் அரசாங்கம் மலேசியாவிடம் ஒப்படைக்கும் என்று ஸாகிட் உண்மையிலேயே எதிர்பார்க்கிறாரா என்று சுரேந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்கிறார்.

pkr_n_surendran_01நமது சட்டத்தின் கீழ் கிளேர் புரிந்துள்ள குற்றங்கள் என்ன என்பதைக்கூட குறிப்பிட முடியாத நிலையில் ஸாகிட் இருக்கிறார் என்று கூறிய சுரேந்திரன், கிளேர் “மலேசிய விவகாரங்களில் தலையிட்டார்” மற்றும் அவர் வெளியிட்டவை “தீய நோக்கங்கள் கொண்டவை” என்று மட்டுமே அவர் கூறியுள்ளார் என்றார்.

“இவை மலேசியாவிலோ யுகேயிலோ கிரிமினல் குற்றங்கள் அல்ல”, என்று மனித உரிமைகள் வழக்குரைஞரான என். சுரேந்திரன் தெரிவித்தார்.