புவா: கணக்காய்வர் அறிக்கையை பிரதமர் வெளியிட முடியாது என்று கூறும் சட்டம் இல்லையே!

 

Puanorulesaysno11எம்டிபியின் இடைக்கால அறிக்கையை தேசிய கணக்காய்வர் முன்னதாகவே பொதுமக்களுக்கு வெளியிடுவதை நாடாளுமன்ற நிறைநிலை விதிகள் தடுக்கின்றன என்று பாரிசான் தரப்பினர் கூறுவதை பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் அறிவற்ற கருத்து என்றார்.

பாரிசானின் வியூகத் தொடர்பு இயக்குனர் அப்துல் ரஹ்மான் உண்மையை மறைக்க நாடாளுமன்ற நிறைநிலை விதிகளில் இல்லாதவற்றை சுட்டிக் காட்டி அவ்விதிகள் பிரதமர் அந்த அறிக்கையை வெளியிடுவதைத் தடுக்கிறது என்று கூறுகிறார்.

“அமைச்சரின் கூற்று முழு முட்டாள்தனமாகும்”, என்று புவா இடித்துரைத்தார்.

நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் (பிஎசி) அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு அதனை வெளியிட முடியாது. அந்த விதி பிஎசியின் அறிக்கை பற்றியது, தேசிய கணக்காய்வரின் அறிக்கை பற்றியதல்லPuanorulesaysno2 என்று புவா நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் விளக்கியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பாரிசானின் வியூக இயக்குனர் அப்துல் ரஹ்மான் 1எம்டிபின் கணக்காய்வு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் ரசாக் அதனை வெளியிட முடியாது என்று கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய புவா மேற்கண்டவாறு கூறினார்.

டோனி புவாவும் இதர எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கணக்காய்வரின் இடைக்கால அறிக்கையை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.