நாடும் அம்னோவும் இக்கட்டான நிலையில் இருந்த போதிலும், முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி இன்று அளித்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமரும், துணைப் பிரதமரும் புன்னகை தவிழ்ந்த முகத்தோடு காணப்பட்டனர்.
உபசரிப்பிலிருந்து கிளம்பிய பிரதமர் நஜிப்பின் காரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்களுக்கு அவர் ஒரே ஒரு சொல்லில் பதில் அளித்தார்.
சிக்கலில் மாட்டியிருக்கும் பிரதமரின் செல்லமான 1எம்டிபி திட்டம் குறித்து அவர்கள் கேள்விகளை உரத்த குரலில் எழுப்பினர்.
காரில் ஏறி கிளம்புவதற்கு முன்னர், அனைத்து கேள்விகளுக்கும் அவர் அளித்த ஒரே பதில்: ஓகே, லா!
அங்கே இருந்த முன்னாள் பிரதமர் மற்றும் தற்போதைய துணைப் பிரதமர் ஆகியோர் நிகழ்ச்சி முடியும் வரையில் மகிழ்ச்சியாகக் காணப்பட்டனர். ஆனால், 1எம்டிபி பற்றி கேட்ட போது மௌனிகளாகி விட்டனர்.
கே ஒ (KO) – லா
கேள்விக்கான தகுந்த பதில் இருந்தால்தானே பதில் சொல்ல!! கெட்டிக் காரனின் / கேடிக்காரானின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு திக்குத் தாளம்!!!
மௌனம் சம்மதட்குஅடையாளம் .
ஒ கே தான் -இதுதான் இவன்களின் நடைமுறை– கேட்க யாரால் முடியும்? நீதியும் அதிகாரமும் பணமும் இவன்கள் கையில் — இதென்ன மேற்கத்திய நாடா–நீதிக்கும் நியாயத்திற்கும் விடிவுவர?
நோன்பு பெருநாள் முடிந்ததும் அம்னோவில் குத்தாட்டம், கதக்களி, குச்சிபுடி எல்லாம் நடக்க ஆரம்பித்து விட்டது. நேற்றைய செராஸ் அமீனோ கூட்டத்தில் மொக்கை மூஹிடினின் உரையைப் பார்க்கும் பொழுது நீயா நானா? போட்டுப் பார்த்து விடுவோம் என்ற நிலைக்கு வந்து விட்டதாக தெரியுது. மாமக்தீரும் அமீனோ அடிமட்டத் தலைவர்களிடையே வேண்டிய உத்தரவுகளை கொடுத்தாகி விட்டது போல் தெரிகின்றது. அப்புறம் என்ன நம்பிக்கை நாயகன் கவிழும் வரையில் போராட்டாம்தான். ஊடகங்களுக்கு நல்ல வேட்டைதான்.
அசிங்கத்தை வெளியே காட்டி கொள்ளாதவன்தான் அரசியல்வாதி என்பதைதான் “ஓகே லா” என்று கூறியிருப்பாரோ நஜிப்.
ஓகே.. லா என்று “முதல்வன்’ ரகுவரன் ஸ்டைலில் கூறினாரா ? அல்லது “சகுனி” பிரகாஷ் ராஜ் ஸ்டைலில் கூறினாரா ?
இப்போதெல்லாம் பிரதமர் நஜிப்பை பத்திரிக்கை/தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் மேலே குறிப்பிட பட்டவர்களின் கதாபாத்திரம்தான் ஞாபகம் வருகிறது.
ஓகே லா மலேசியா போலேலா