கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ‘பட்ஜெட்’ பயண முனையம் பூமிக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கிறது. விமானங்கள் மெதுவாக நகர்ந்து செல்லும் நடையோடுபாதையில் விரிசல்கள் ஏற்பட்டு நீர் தேங்கி நிற்கிறது.
இக்குறைபாடுகளால் பயணங்கள் தாமதமாகலாம், விமானங்களில் தேய்மானங்கள் அதிகரிக்கலாம் ஆபத்துகளும் நிகழலாம் என ஏர் ஏசியா நிறுவனம் கூறிற்று. இதுவரை விமானங்களின் புறப்பாடும் தரைஇறங்கலும் பாதிக்கப்படவில்லை ஆனாலும் பயணிகளிகளுக்கு எதுவும் ஏற்படுவதற்கு முன்பு பிரச்னைகளைக் களைவது நல்லது என ஏர் ஏசியா தலைமை செயல் அதிகாரி ஐரீன் ஒமார் விமான நிலைய அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
“விமான நிலையம் அமிழ்ந்து கொண்டிருக்கிறது”, என்று ஐரீன் குறிப்பிட்டார். ஏர்போர்ட்ஸ் ஹொல்டிங் நிறுவனம், “மேற்பரப்பை மட்டும் அரைகுறையாக செப்பனிட்டிருக்கிறது. ஆனால், விமான நிலையத்துக்குத் தேவை நிரந்தரமான தீர்வு”, என்றாரவர்.
KLIA2 அமிழ்ந்து கொண்டிருக்கிறதா ?
இப்படி அமிழ்ந்து கொண்டிருந்தால்தானே UMNO-வின் “BUMIPUTRA A1” குத்தகையாளர்கள் சம்பாதிக்க முடியும். எந்த ஒரு குறைபாடுகளும் இல்லாவிட்டால் உங்களுக்கு மட்டும் லாபம், UMNO-வின் “BUMIPUTRA A1” குத்தகையாளர்களுக்கு நட்டம். இது நியாயமா ?
எல்லாமே ஊழலாக இருக்கும் பொது நாடே தான் அமிழ்ந்து கொண்டிருக்கிறதே! முன்பு எல்லாம் இல்லாத ஊழல் இப்போது பேயாட்டம் போட்டு கொண்டிருக்கிறது. விடிவு இருக்குமா அல்லது எப்போதும் போல் எல்லாவற்றையும் கூட்டி பாய்க்கு அடியில் போட்டு நம்மை எல்லாம் முட்டாள்கள் ஆக்கி குளிர் காய்வான்கலா?
KLIA2 அமிழ்ந்து கொண்டிருக்கிறதா ?
இப்படி அமிழ்ந்து கொண்டிருந்தால்தானே UMNO-வின் “BUMIPUTRA A1″ குத்தகையாளர்கள் சம்பாதிக்க முடியும். எந்த ஒரு குறைபாடுகளும் இல்லாவிட்டால் உங்களுக்கு மட்டும் லாபம், UMNO-வின் “BUMIPUTRA A1″ குத்தகையாளர்களுக்கு நட்டம். இது நியாயமா ?………..அப்படி போடு.
அரசாங்கமே 1MDB -க்கு நிரந்தரமான தீர்வு காண முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இவரு வேற நேரம் காலம் தெரியாம KLIA 2 விமான நிலையத்துக்கு நிரந்தரமான தீர்வு தேவை என்று கேட்டு அரசாங்கத்தை மேலும் கடுப்பேத்திக் கொண்டிருக்கின்றார், ‘மை லார்ட்’.
நாடே உம்நோகாரர்களால் கொள்ளையடிக்கப்பட்ட கடனில் அமிழ்ந்து கொண்டிருக்கையில் ,,,மேலும் கொள்ளையடிக்க அவர்கள் முயன்று கொண்டிருக்கையில் ,,,,, விபத்து ஏதும் நிகழாத வரை செவிடன் காதில் ஊதிய சங்குதான் ,,,
பயணிகளுக்கு ஏதாகிலும் ஆகியப் பின்னரே நாங்கள் பிரச்சனைகளைக் களைய முயற்சி செய்வோம்! கடவுளின் பெயரால் ஏதாவது பழி சொல்லுவதற்கு அது தான் வசதி! இயற்கையின் சீற்றத்திற்கு முன்னர் நம்மால் என்ன செய்ய முடியும்?