த எட்ஜ் பத்திரிகைகள் மூன்று-மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதற்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் காரணம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.
ஆனால் காரணம் அதுவல்ல என்கிறார் பாஸ் எம்பி மாபுஸ் ஒமார்.
அது, அம்னோ தலைவர்களின் “அரசியல் சதித்திட்டமாம்”. பிரதமரை இதற்குமேலும் தற்காக்கவோ பாதுகாக்கவோ இயலாது என்ற முடிவுக்கு வந்துள்ள அம்னோ தலைவர்கள் உதவித் தலைவர் அஹ்மட் ஜாஜிட் ஹமிடி மூலமாக அந்நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்ற ஊகம் நிலவுவதாக மாபுஸ் ஓர் அறிக்கையில் கூறினார்.
“நாளேடுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதுகூட பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு நஜிப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்காகத்தான்”, என்றாரவர்.
“நஜிப் இந்த அழுத்தத்துக்குப் பணிந்து போவாரா மாட்டாரா என்பது 1எம்டிபி விவகாரத்தைப் புலனாய்வு செய்துவரும் சிறப்புப் பணிக்குழுவைப் பொறுத்துள்ளது.
“பணிக்குழுவை நஜிப்பால் ‘வாங்க’ முடிந்தால் மேலும் சிறிது காலத்துக்கு அவரால் தாக்குப் பிடிக்க முடியும். ஆனால், பணிக்குழு கடுமையான கண்டனத்துக்கு இலக்காகும். அதில் சம்பந்தப்பட்டுள்ள அமைப்புகளின்மீது நம்பிக்கை குறைந்துபோகும்.
“அடுத்த அத்தியாயத்துக்காகக் காத்திருப்போம்”, என்று மாபுஸ் கூறினார்.
நீங்கள் என்னதான் “நஜிப்@அல்தாந்துயா கொலை” என்று கத்தினாலும், “நஜிப்@1MDB கொள்ளை” என கதறினாலும்,
நஜிப் “PENDEK-KATA” இதெல்லாம் “NIAT-JAHAT”
அடுத்து அமிடியின் வண்டவாளத்தை ,,தி எட்கேபிரசுருத்தி விடுமோ என்ற அச்சத்தில் தடை செய்யபட்டிருக்கலாம் ,,,,ஒரு ஊகம் தான் ,,,
அல்தாந்துயா நஜிப், பதவியை விட்டு இறங்கவேண்டும் என எதிர்கட்சிகள் ஒப்பாரி வைப்பது முட்டாள்தனமாகும். அடுத்த பொதுத்தேர்தல் வரை நஜிப் பிரதமராக இருந்தால்தான், பக்காத்தான், புத்ராஜெயாவை நெருங்கமுடியும்.