லிம் கிட் சியாங் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்மீது எவ்வளவோ வசை பாடியுள்ளார், குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். ஆனால், இப்போது நாட்டைப் பாதுகாக்க மகாதிரின் உதவியைத்தான் அவர் நாடுகிறார்.
மகாதிரும் அவருக்குத் துணையாக இருந்த அப்துல்லா அஹமட் படாவியும் மூசா ஹித்தாமும் சேர்ந்து அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன்னை எதிர்க்க “மலேசியாவைப் பாதுகாப்போம்” கூட்டணி ஒன்றை அமைக்க வேண்டும் என்று லிம் முன்மொழிந்துள்ளார்.
1எம்டிபி குளறுபடியால் நாடு அழிந்துவிடக் கூடாது என்றாரவர்.
“அரசியல் தலைவர்கள் அனைவரும் கட்சி, இனம், சமயம், வயது, பால் வேறுபாடு பார்க்காமல் ஒன்றுசேர்ந்து ‘மலேசியாவைப் பாதுகாப்போம்’ திட்டமொன்றை வகுக்க வேண்டும்.
“டிஏபியும் முற்போக்கு அரசியல் சக்திகளும் ‘மலேசியாவைப் பாதுகாப்போம்’என்ற எழுச்சியூட்டும் இயக்கத்தில் சேர தயாராகவுள்ளன”, என்றாரவர். லிம், கோலாலும்பூரில் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்படிப்பட்ட கூட்டணிக்கு ஏற்பாடு செய்வது யார் என்று வினவியதற்கு, “மூன்று துன்கள்(மகாதிர், அப்துல்லா, மூசா), அல்லது ஆளும் கட்சியிலும் எதிரணியிலுமுள்ள முற்போக்காளர்கள் அல்லது எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அதற்கு ஏற்பாடு செய்யலாம்”, என்றார்.
லிம், இதன் தொடர்பில் மகாதிரையோ மற்ற தலைவர்களையோ இன்னும் அணுகவில்லை என்பதால் அதைப் பற்றி மேலும் விவரிக்க விரும்பவில்லை.
லிம் கிட் சியாங் அவர்களே! ஆட்சியை பிடிக்க முன்னாள் அரசியல் எதிரிகளை துணைக்கு அழைப்பது கடைந்தெடுத்த கோழைத்தனம். உங்கள் கட்சியில், ஒரு சிலரை தவிர, பெரும்பாலோர் உதவாக்கரைகளாக இருக்கலாம். ஆனால், PKR லும், GHB யிலும், மேலும் பழைய அரசியல்வாதிகளான சைட் இப்ராஹிம், லீ லாம் தாய் போன்றோர் உங்கள் ‘மேல் மாடிக்கு’ எட்டவில்லையா? தற்போதைய அம்னோ ஒழிந்தால்தான் நாடு உருப்படும். பழைய அம்நோவினரை உங்களோடு சேர்த்துக் கொள்வது, நாடு உருப்பட்ட மாதிரிதான்.
லிம் கிட் சியாங் அவர்களே நீங்கள் சேராத இடம் சேர எண்ணுகிறீர்கள் அவர்கள் பங்காளிகள் இனம் இனத்தோடுதான் சேரும் ” சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் ” உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்து ஆகாது ” சிந்தித்து சரியாக தேர்வு செய்யுங்கள் !
இந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தவனே இந்த ஈன ஜென்மம்– அவன் திருந்தி இருக்கவே மாட்டான். — அப்படி இருக்கையில் ………..?
காடை பிடிப்போம், கௌதாரி பிடிப்போம் ஆனா “காக்கா” பிடிக்க மாட்டோம் என்று முன்னமே பாடி வச்சிதை லிம் கியாட் சியாங்கிற்கு – அந்த கட்சி தமிழர் யாராவது பாடி காட்டுங்கப்பா.
ரெண்டு திருடனும் ஒன்னு சேர்ந்த தமிழனுக்கு சங்குதான்!!!
இந்த மடையனுக்கு ஆட்சி பிடிப்பதில்தான் குறி..பகல் கனவு பலிக்காது அப்பு…PKR ஒரு திறமை மிக்க கட்சி ஆனால் இவனை போன்ற மடையனுடன் கூட்டு சேர்ந்து தன் பெயரை கெடுத்து கொள்கிறது..முதலில் கூட்டனியில் இருந்து இவனை நீக்குங்கள்..பிறகு பெரும்பாலான மலாய்காரன் ஓட்டும் PKR க்கு தான்…இப்படி கோட்டை விட்டு கொண்டிருக்கிரிர்களே…
மிஸ்டர் தேனீ! ‘காக்கா’ யாரென தெரியும். இந்த ‘காடையும்’ ‘கௌதாரியும்’ யார்?
அரசியலில் “எதிரிக்கு எதிரி நண்பன்” என்பதை நிரூபிக்க நம் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இப்படி களம் அமைந்தாலும் ஆச்சர்யம் இல்லை. .
லிம் + மகாதீர் VS நஜிப் + அனுவார்
அல்லது
மகாதீர் + அனுவார் VS நஜிப் + ஹாடி
கொள்கை இல்லா எந்த கம்ம்னாட்டிக்கும் வாக்கு போட மாட்டேன்.