அரசமைப்புச் சட்ட வல்லுனரும் முன்னாள் சட்ட விரிவுரையாளருமான அப்துல் அசீஸ் பாரி டிஏபி-இல் சேர்ந்துள்ளார்.
டிஏபி திறமைக்கு மதிப்புக் கொடுப்பதும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அதன் பண்பும் தம்மை வெகுவாகக் கவர்ந்து விட்டது என்றாரவர்.
கடந்த பொதுத் தேர்தலில், அசீஸ் சாபாக் பெர்ணம் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால், பிஎன் வேட்பாளரான முகம்மட் பாசியா முகம்மட் ஃபாக்கேயிடம் தோற்றார்.
அசீஸ் இன்று கோலாலும்பூரில் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், கட்சி பிரச்சாரப் பகுதித் தலைவர் டோனி புவா முதலியோருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“பதவியை நாடவில்லை. (கட்சிக்குப்) பங்காற்றவே விரும்புகிறேன்”, என்றாரவர்.
பிகேஆரிலேயே இருக்காமல் டிஏபி வந்தது ஏன் என்ற கேள்விக்கு தம் திறமையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள டிஏபி-தான் ஏற்ற இடம் என்றார்.
ஜ.செ.க. – க்கு மலாய்க்காரர்களை கவர இது ஒரு பெரிய சாதனை என்றே கூற வேண்டும். மலாய்க்காரர்களை வரவேற்கும் ஆர்வத்தில் தமிழர்களை அவர்கள் மறந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. ஏறும் வரைதான் ஏணி தேவைப்படும். ஏறி விட்டப் பிறகு எட்டி உதைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.
நல்ல முடிவு. தொடரட்டும் உமது சேவை!!! இயன்றால், எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ், ஒரு சின்னத்துடன் ஒன்றிணைவது இன்னும் சிறப்பு. ஆர் ஒ எஸ் இதற்கு சம்மதம் கொடுப்பது குதிரைக் கொம்பே!!! முயற்சி செய்து பாருங்கள்!!!
தேனீ! உண்மைகளை உளறிக் கொட்டுவதை நிறுத்துங்கள். வயிற்றில் புலியை கரைக்கிறது.
தேனீ, ஏன் எதிர்மறையாக சிந்திக்கவேண்டும் ஆக்ககரமாக சிந்தனை செய்யலாமே. ஆரம்பத்திலிருந்தே ‘கூட்டணி’ (PARTI PERIKATAN ), இப்பொழுது தேசிய முன்னணி (BARISAN NASIONAL ) யில் இணைந்திருந்த ம.இ.க.வின் இப்போதைய நிலை என்ன? உம்னோ காரன் இடும் பிச்சையில்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு இருந்த மரியாதை எங்கே? நாம்தான் நமது சாதி வித்தியாசத்தை நம்மோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல், நம்முடைய பலவீனத்தை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துகிறோம். மலாய் இனத்தவரிடமும், சீனரிடமும் நம்மிடையே உள்ள ‘சாதி’ எண்ணிக்கையைவிட அதிகாமாக இருக்கிறது என்றால் அந்த உண்மையை நாம் எற்றுக்கொள்ளமாடோம். காரணம் அவர்கள் அந்த வித்தியாசத்தை நமக்கு காண்பிக்கவில்லையே. முதலில் நம்முடைய வேறுபாடுகளை நம்மோடு வைத்துவிட்டு அடுத்தவர்களோடு ஈடுபடும்போது நாம் ஒற்றுமையாக இருந்தால் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள். இருப்பவன் ஒழுங்க இருந்தா சிறைப்பவன் ஒழுங்கா சிறைப்பான். நம் இனத்தவர்கள் நாம் நான்கு பேரோடு ஐந்தாவதாக பிற இனத்தவன் இருந்தால், நம் இனத்தவர்கள் அந்த ஐந்தாவது பிற இனத்தவனைதானே தங்களுக்கு தலைவராக தேர்வு செய்வார்கள். ஆக ஏணியாக இருந்து பிற இனத்தானை மட்டும் ஏற உதவாமல் நம்மவரும் உயர உதவுவோமா? ஒற்றுமைதான் பலம்.நாம் எண்ணிக்கையில் சிறிதாக இருந்தாலும் நாட்டின் மக்களில் நாம் மூன்றாவது அதிக எண்ணிக்கையாக இருக்கிறோம். கிழக்கு மலேசியர்கள் பல இனத்தவர். ஒவ்வொரு இனமும் நம்மைவிட எண்ணிக்கையில் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இப்பொழுதாவது நாம் தீவிரமாக சிந்தித்து செயல்ப்பட்டால் நமக்கு கிடைக்கவேண்டிய பங்கினை நாம் கேட்டு பெறலாம். நாம்மிடையே உள்ள ஒரு சாதியின் பெயரைக்கொண்டு அவர்களில் உள்ள தரம் குறைந்தவர்களை சித்தரிப்பாட்கள்.அந்த அளவுக்க நாம் நம்மை விளம்பரம் படுத்த்தியுள்ளோம். நம்மை ஆள நினைப்பவன் முதலில் நமது ஒற்றுமையை கெடுப்பான்.அதன் பிறகு அவன் நம்மை தனித்தனியாக வெல்வான். காலம் அறிந்து செயல்படுவோம். நம்மை பற்றி மற்றவர்கள் தரக்குறைவாக விமர்சிக்க இடம் தரக்கூடாது. நம்மவர்களில் பலர் அடுத்த இனத்தானிடம் அடிமையாக உழைப்பான். ஆனால் நம்மவனிடம் அதே வேலையே செய்யும்போது எநோதநோவேன்று செய்வார்கள். முன்பு தோட்டங்களிலும் அப்படிதான். வெள்ளைக்காரன் அதிகாரிக்கு கொடுக்கும் மதிப்பை அதே நிலையில் இருக்கும் நம்மவனுக்கு கொடுக்கமாட்டான். தோட்டப்புறத்தில் மட்டுமல்ல நகர்புரத்த்திலும் அப்படித்தான்.நம்மை ஒடுக்க பிற இனத்தான் நம்மவனைத்தான் பயன்படுத்தியுள்ளான். இவ்வாறு பாதிக்கப்பட்டவனுள் நான் ஒருவன்.ஒற்றுமையுடன் செயல்படுவும் உயர்வடைவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
யானை வரும் பின்னே மணியோசை முன்னே என்று முன்னோர்கள் சொல்லியதை முன் கூட்டியே சொன்னேன் திரு. சிங்கம் அவர்களே.
சாதியைப் பற்றி பேசாமல் இருந்தாலே சாதியைப் பற்றி பேச வாய்ப்பில்லாமல் போகும்! ஒரு சிலர் தங்களை வீர சூரனாகக் காட்டிக்கொள்ள சாதியைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்!
தேனி ஐயா, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நம்மவர்கள் பிரச்னையை தீர்த்து விட முடியாது ! நம்மை உயர்த்தி கொள்ள நாம் தான் சிந்திக்க வேண்டும், முயற்சிக்க வேண்டும் . கட்சிகளை, நம்பிக் கொண்டிருந்தால் பயன் இல்லை .##### மு.த. நீலவாணன்
சட்ட நிபுணர் அவர் தன் சட்டையே மாற்றி விட்டார் என்றால் ,நடப்பு நாட்டு சட்டம் கோளாறாக இருப்பதாக பொருள் ,