நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கைது செய்ய வேண்டுமென்று தாம் ஒரு போதும் சொன்னதில்லை என்று மறுத்திருக்கிறார்.
சுவாரா டிவி-இல் ஒலிக்கும் குரல் தம்முடையது அல்ல என்றாரவர்.
“சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் அந்தக் குரல் என்னுடையது எனச் சில தரப்பினர் சுமத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன்.
“எனக்கும் அந்த ஒலிப்பதிவுக்கும் அந்த ஒலிப்பதிவில் பேசும் மனிதருக்கும் சம்பந்தமே இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்”, என ஹசான் ஓர் அறிக்கையில் கூறினார்.
அந்த ஒலிப்பதிவில் ஒரு மனிதர் 1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினை ஆதரித்துப் பேசுகிறார்.
“முகைதின் செராஸில் பேசியது சரியே. குற்றவாளிகளை அல்லது சந்தேகத்துக்கு உரியவர்களை ஏன் கைது செய்யவில்லை என முகைதின் வினவினார்.
“குற்றமற்றவர்களைக் கைது செய்தார்கள். இதற்கு நஜிப்தான் பொறுப்பு. எனவே, நஜிப்பைக் கைது செய்வீர்”, என அந்த ஒலிப்பதிவில் கூறப்பட்டிருந்தது.
குற்றம் இழைத்த ஆதாரம் வலுவுடன் காணப்படும் வரை நாட்டின் பிரதமரை கைது செய்வது அர்த்தமற்றது.. இருப்பினும், முதல் கட்ட விசாரணையின் பெயரில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிடுக்கலாம். அந்த ஆரம்ப நடவடிக்கையும் அமைதியாக இருப்பதே மக்களிடம் சந்தேகம் வலுவடைகிறது!!
அரசாங்க உயர் பதவியில் உள்ள எல்லாருமே பொதுவில், பிரதமருக்கு ஆதரவாகத்தான் பேசுவார்கள். இல்லையெனில், முன்னால் துணைப் பிரதமர் முஹிதின் கதிதான். புகைந்துகொண்டிருப்பது அப்படியே அணையாமல், காட்டுத் தீயாய் உண்மையான குற்றவாளியை சுட்டெரிக்கட்டும்!!!
சிற்றெரும்பு; காட்டுத்தீயாய் எரியாமல் கட்டட தீயாய் எரிந்து உண்மைகள் பல,சாம்பலாகிவிட்டது!
ninja, சிந்திக்க வேண்டிய செய்தியே!!! மலேசியா பொலெஹ்!!!!
இதற்கு யார் பொறுப்பு என்று போலிசார் இன்னுமா கண்டுபிடிக்கவில்லை?