அடுத்த மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் பொதுக் கணக்குக் குழுவின்(பிஏசி) விசாரணையை எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தக் கூடாது என பிஏசி துணைத் தலைவர் டாக்டர் டான் செங் கியாவ் கூறினார்.
இன்று ஓர் அறிக்கையில் இவ்வாறு உரைத்த கெப்போங் எம்பியுமான டான், செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாள்களுக்கு நடைபெறும் விசாரணை நியாயமான முறையிலும் பிஏசி-யின் நேர்மையைப் பாதுகாக்கும் வகையிலும் நடத்தப்படும் என்றார்.
“இது போன்ற விசாரணையைத் தாமதப்படுத்தக் கூடாது. 1எம்டிபி பற்றிய உண்மையை அறிய விரும்பும் மலேசியர்களின் ஆர்வத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்”, என்றாரவர்.
பொதுமக்களின் நலன் கருதி 1எம்டிபி மீதான விசாரணையைத் தொடர்வதற்கு மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அனுமதிக்க வேண்டும் என்றும் டான் கேட்டுக்கொண்டார்.
அந்த மூன்று நாள்களில் 1எம்டிபி முன்னாள் தலைமை செயல் அதிகாரிகள்(சிஇஓ) ஷாருல் இப்ராகிம் ஹல்மி, முகம்மட் ஹாசெம் அப்துல் ரஹ்மான் ஆகியோரும் நடப்பு சிஇஓ அருள் கண்ட கந்தசாமியும் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதனிடையே, பிஏசி உறுப்பினரும் டிஏபி பிரச்சாரப் பகுதித் தலைவருமான டோனி புவா, 1எம்டிபி விசாரணையைத் தொடர்வதற்கு பண்டிகாரின் அனுமதி தேவையில்லை என்கிறார்.
“திட்டமிடப்பட்ட பிஏசி-இன் விசாரணையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை”, என புவா செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
பிஏசி தலைவர் கலந்துகொள்ள முடியாதபோது புதிய தலைவர் ஒருவரை நியமிக்க நிலை ஆணைகள் இடமளிப்பதாக அவர் சொன்னார்.
“பிஏசி சட்டப்பூர்வமானது”, என்று குறிப்பிட்ட புவா, சாட்சிகள் கண்டிப்பாக விசாரணைக்கு வர வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
தொடருங்கள்!! தடைகள் எல்லா திசைகளிலிருந்தும் நிச்சயமாக ஈட்டி போல் பாய்ந்துவரும்!!! ஜோ லாவ் எப்படி?? அல்தாண்துயா கொலையாளிபோல் எங்காவது அடைக்கலம் புகுந்துவிட்டாரோ??? நிதி அமைச்சு இதற்காக இதுவரை ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா??
மக்களின் நலன் கருதி ,,,,டாக்டர் டான் ,,, சொல்வது உண்மை ,,, பி எ சி யின் விசாரணை தொடர வேண்டும் ,,,, படிக்காரன் மூலி அனுமதி வழங்க வேண்டும் ,,,,இறுதியாக இளிச்சவாயன் அருள் கந்தா அரெஸ்ட் செய்யபடுவான்,,,,பிறகு அவன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று அடிக்கலாம் புகுவான் ,,,,, கேஸ் closed,,,,,,,
உங்கள் உயிர் போகும் வரை விசாரணை நடத்துங்கள் ,பிறகு அடுத்தவர் வந்து தொடங்குவார் .
சொன்னதுபோல், முதல் தடை பண்டிகார் ரூபத்தில் நுழைந்த்விட்டது!!!
எல்லாம் தாமதப்படுத்தும் தந்திரமே !!! மலேசியா சட்டத்தை உமக்கு சாதகமாக திசை திருப்பலாம்!! மக்களை அல்ல!! ஒருவனைக் காப்பாற்ற ஆட்சியே பலி கடா!!!
ஏதோ இன்னொரு எம்.ஐ.சி. ஆகாமல் இருந்தால் சரி! வேறு என்ன சொல்ல?