ஜோகூர் லாபிஸ் அம்னோ இளைஞர் பகுதி, 1எம்டிபி சிறப்புப் பணிக்குழு அதன் பணியை இடையூறின்றிச் செய்வதற்கு வசதியாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விடுப்பில் செல்ல வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
நஜிப், பொதுக் கணக்குக்குழு உறுப்பினர்கள் நால்வரை அமைச்சரவையில் இழுத்துப் போட்டுக் கொண்டு அப்துல் கனி பட்டேலைச் சட்டத்துறைத் தலைவர் பதவியிலிருந்து தூக்கியதையும் அடுத்து மக்களுக்குப் பணிக்குழு மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது என்றது கூறியது.
“இப்படிப்பட்ட சூழலில் மக்களுக்கு விசாரணைமீது எதிர்மறையான எண்ணம்தான் தோன்றுகிறது.
“விசாரணையில் ஒளிவுமறைவு இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் விசாரணை சுமூகமாக நடப்பதற்கும் பிரதமர் விடுப்பில் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்”, என அப்பகுதி வெளியிட்ட அறிக்கை கூறியது.
கசகஸ்தான் ஊழல் தலைமகள் கொடுக்கும் ஆலோசனை இன்னும் எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கும் என்றுதான் பார்ப்போமே.
தொகுதி தலைவருக்கு இதைப் பற்றி தெரியுமா??? எது எப்படியோ! தைரியமாக குரல் கொடுத்திருப்பது பாராட்டத் தக்கது!!! விளைவை பொறுத்திருந்து பார்ப்போம்!!!
பொதுக் கணக்குக்குழு தன்மீது விசாரணை மேற்கொண்டு வருவதை தடுப்பதற்கு அவர்களை தனக்கு கீழ் கொண்டு வந்தாலே போதும் என்று அமைச்சரவைக்கு கொண்டு வந்து விட்டார் போலும் நம்பிக்கை நாயகன். இவனுங்களும் கொஞ்சமும் சூடு சொரணை இல்லாமல் அங்கு போய் பச்சோந்திகளாக சேர்ந்துக் கொண்டார்கள். இவர்கள் அமைச்சர்களா? நாடு உருபட்ட மாதிரிதான்.
யாரும் எதைப்பற்றியும் குரல் கொடுக்கலாம் ஆனால் விளைவுகள் ? 3ம் உலக புத்தியே பதவியை விடாமல் எவ்வளவு தில்லு முள்ளு திருகு தாளம் பண்ணியாவது தன கையில் வைத்திருப்பதே. இவனாவது விடுப்பில் போவதாவது. உண்மை எப்போதும் இவங்களின் பெட்டியில் தூங்கி கொண்டிருக்கும்.
இவனை போன்ற தலைவர்களை வளர்த்து விட்டது அம்னோ. உதில் முக்கிய பங்கு கிழவனையே சாரும்.
விடுப்பில் தேனிலவு சென்று வாருங்கள் மக்கள் பணம் தானே???
அடுப்படியில் வேலை செய்பவனெல்லாம் விடுப்பில் போகச் சொல்லுகிறான்! அனுதாபங்கள் நஜிப்!
விடுப்பில் போங்கள் இல்லை பாடையில்தான் போவீர்கள் என்று லாபிஸ் மக்கள் சொல்கிறார்கள் என்னவோ !