“கட்சியை மிகவும் நேசிக்கிறேன். அதனால் எதிர்த்துப் போராட மாட்டேன்”, என முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார்.
பாகோ பிஎன் தொகுதித் தலைவர்களிடையே பேசியபோது முகைதின் அவ்வாறு கூறியதாக சைனா பிரஸ் அறிவித்துள்ளது.
அனைவரும் கட்சியின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய அம்னோ துணைத் தலைவருமான முகைதின், தாம் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக யாரும் உணர்ச்சிவசப்படக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
அது கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல.
தாம் வெளியேற்றப்பட்டதை எண்ணித் தம் குடும்பத்தார் மிகவும் ஒடிந்து போனார்கள் என்றவர் கூறினார். அதைச் சொல்லியபோது அந்த 68-வயது அரசியல் தலைவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை என சைனா பிரஸ் கூறிற்று.
பாகோ அம்னோ தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில் மசீச, மஇகா தலைவர்கள் உள்பட சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.
நீர் ரொம்ப நல்லவர் ஐயா!. எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொள்கின்றாய். நம்பிக்கை நாயகனுக்கு ஏதோ பின்னால சூனியம் வைக்கப் போற என்பதும் மட்டும் நல்லா தெரியுது. ஜோகூரில் சம்பாதித்து புற்றஜெயாவில் ஏப்பம் விட்ட பிறகு, வயிர கொஞ்சம் காத்தாட போட்டிருக்கிங்க. அவ்வளவுதான். பாவம் மக்கள்தான் இந்த அரசியல்வாதிகளை ரொம்பவும் நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டு அவனுக்கு இவனுக்கு என்று கூப்பாடு போடுகின்றனர்.
எதிர்த்தால் கட்சியில் இருந்து தூக்கப் படுவாய். அதுவே, அம்னோ உறுபினர்களின் இரங்கலுக்கு ஆளானால் உள்குத்து வேலை சுலமாக நடக்கும். ஆஹா என்ன அருமையான ஆடு புலி ஆட்டம். நம்பிக்கை நாயகன் கொம்பன் என்றால் மாமக்தீர் அவனுக்கே கொம்பன் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார். துக்ளக் சோ கூட இவர்களின் அரசியல் சாணக்கியத்தில் தோற்று விடுவார் அப்பா!.
கர்மா பே பேக் டைம் 4 முஹைதீன்.முதலில் த வீல் வில் டேன் என்பதை ஒவ்வொருவரும் நம்ப வீண்டும் .
நீர் கட்சிக்கு முன்னுரிமை கொடுக்கிறாய். பிரதமரோ சுய நலத்துக்கு முன்னுரிமை கொடுப்பதுபோலலவா மாற்றங்களை செய்துள்ளார்!!! கேள்வி கேட்டால் அவுட் யூ கோ!!!!!
நல்ல தலைவனுக்கு
இது
தான் அழகு
. வின
போனவங்கள்
மறுபடியும்
வன்து
தொல்லை
கோடுப்பது
முட்டல்
முட்டல்
முட்டல் முட்டல்
எங்கள் இனத்தின் அடையாளமான தமிழ்ப்பள்ளிகளையே ஒடுக்கியவர் நீர். கண்ணீர் பல்கிப் பெருகட்டும்!
இந்த முதலை கண்நீருக்கெல்லாம் மக்கள் நனைய மாட்டார்கள். ஜிப்பு இருக்கிற பிடியிலே வண்டவாளமும் தண்டவாளம் எரிரும்னு பயம்.
இவன் கொள்ளை அடிக்க மேலும் பல திட்டத்தை தீட்டி வைத்து இருந்தது ,,,, வீண் போய்விட்டதே என்பதை நினைத்து அழுதிருப்பான் ,,,,,
முதலில் நான் மலாய் முஸிலிம் பிறகுதான் மலேசியன் என்று சொன்ன அறிவீளிதானே நீ ! எதிர்க்க மாட்டாய் ”படாவி” போன்று மீண்டும் அம்னோவில் ஜால்ரா அடித்து பிரதமரை வரலாம் என்று எதிர் பார்கிறாயா ? இப்போ இருக்கும் துணை பிரதமரை பார்த்தால் நாடு விளங்கிடும்போல் தெரிகிறது !