சிறப்புப் பணிக் குழு, எஸ்ஆர்சி இண்டர்நேசனல்மீது மேற்கொண்ட விசாரணை தொடர்பில் குற்றப் பத்திரிகை எதுவும் தயாரிக்கப்படவில்லை என மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கூறியது.
அந்த விசாரணை இன்னும் தொடர்வதாகவும் விசாரணை அறிக்கை எதுவும் சட்டத்துறை தலைவர்(ஏஜி) அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் அந்த ஆணையம் இன்று ஓர் அறிக்கையில் கூறியது.
“எஸ்ஆர்சி விவகாரம் தொடர்பில் விசாரணை இன்னமும் தொடர்கிறது. அதனால் அதன்மீது குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை”, என்று அது கூறிற்று.
அப்துல் கனி பட்டேல், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது குற்றஞ்சாட்டவிருந்தார் அதனால்தான் அவர் ஏஜி பதவியிலிருந்து தூக்கப்பட்டார் என்று சரவாக் ரிப்போர்ட்-டில் வெளிவந்த செய்திக்கு எதிர்வினையாக எம்ஏசிசி இவ்வாறு தெரிவித்தது.
அட எவனுக்குமே உண்மையைச் சொல்ல தில்லு இல்லையா?. இப்படியா இந்த இனம்?
ஊழலில் உழல்பவனையே ,,, ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு தலைவானாக உட்காந்து இருப்பது இந்நாட்டின் உயர்வான இன உன்னத தன்மையை காட்டுகிறது ,,,,
இந்த நாட்டில் யார் உண்மை சொல்கிறான் என்று பெரும்பாலான மக்களுக்கு தெரியும்– தெரிந்தும் அதை பற்றிய அக்கறை இல்லை. அக்கறை உள்ளவர்கள் அநீதிக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதற்க்கிஉ எல்லாம் முக்கிய காரணம் நீதி தேவதை கண்களை திறக்காமல் இருப்பதே. (நீதிபதிகள் அம்னோ குஞ்சுகளாகவும் இன மத துவேசிகளாகவும் இருப்பதே )
மேலே உள்ள படத்தை பார்த்ததும், ஜோலோ கூறிய “SPIN MASTER” என்பதற்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்த முகத்தை காணலாம்.
அனுபவித்தவனும் சரி அனுபவிக்கிறவனும் சரி, விலக்கியவனும் சரி விலக்கப்பட்டவனும் சரி எவனுமே திருவாயை திறக்கவே மாட்டான். திறந்தால், கூண்டோடு கைலாசம் என்று அனைவருக்கும் தெரியும்.