சரவாக் ரிப்போர்ட் இணையத்தளம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை என்று கூறி ஓர் அறிக்கையை வெளியிட்டு அதன் மூலம் பிரதமரைக் குற்றவாளியாகக் காண்பிக்க முயல்வதாக அஹ்மட் ஜாஹிட் ஹமிடி சாடியுள்ளார்.
“அது பிரதமருக்கு எதிராக எதிர்மறையான எண்ணத்தை உருவாக்க முயலும் ஒரு தீய அறிக்கை”, என்று துணைப் பிரதமர் சாடினார்.
அந்த இணையத்தளத்துக்கு எதிராக போலீசும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமும் (எம்சிஎம்சி) நடவடிக்கை எடுக்கும் என ஜாஹிட் தெரிவித்தார்.
குற்றப்பத்திரிகை வரைவு ஒன்றும் அதன் காரணமாகவே அப்துல் கனி பட்டேல் சட்டத்துறைத் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் என்ற செய்தியும் இணயத்தில் வலம் வந்துகொண்டிருப்பதாக நேற்று மலேசியாகினியும் அறிவித்திருந்தது.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அஃபாண்டி அலி, அது ஒரு பொய்யான பத்திரம் என்று கூறி நிராகரித்தார். அது, பிரதமரைக் கவிழ்க்க சதி நடக்கிறது என்பதைக் குறிப்பாக தெரிவிக்கிறது என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே, போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டதா என கனியை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
“ஏஜி அலுவலகம் அப்படி ஓர் ஆவணமே இல்லை என்று மறுத்துள்ளது. அப்படி இருக்கும்போது எதற்காக முன்னாள் ஏஜியை விசாரிக்க வேண்டும். தேவையில்லை என்றே நினைக்கிறேன்”, என காலிட் கூறினார்.
முன்னாள் அரசாங்க சட்டத்துறை தலைவர் எங்கே மாயமாய் மறைந்து விட்டார்?? கவலை வேண்டாம்!! எந்த சூழ்நிலையிலும் பதவி விலக்கப்பட்ட எவருமே தங்கள் திருவாயை திறக்க மாட்டார்கள்!! மாறி மாறி முதுகை சொறிந்துக் கொள்ளலாம்!!!! நாடகம் நன்றாகவே ஓடிக்கொண்டிருக்கிறது!!!
ஏன் அவர்கள் மீது அவதூறு வழக்குப் போட திராணி இல்லையா?. குறுகிய காலத்திற்கு ஆட்டம். அதற்குப் பின் ஓட்டம்.
நீ எல்லாம் சொல்லுவே, லௌ யத்தில் கலவரத்தில் ஈடுபட்டவன் எல்லாம் யாருன்னு உமக்கு நல்லா தெரியும். ஏன்னா அவனுங்க உன்….
நீதிக்கு வந்த சோதனை,மக்களுக்கு வந்ததே வேதனை, இருப்பதை இல்லை என்பார்,இல்லாததை இருக்கு என்பார், இந்த சபையின் கீழ்,அன்வார் இப்ராஹிம் என்னப்பாடுப்பட்டிருப்பார்?
இந்த சட்டத்தின் ஓட்டையில் எத்தனை குற்றவாளிகள் தப்பிஇருப்பர்?
மெய்யை ,, பொய் என்று உரக்க கூரவெ இவர்களுக்கு பதவி வழங்க்கப்பட்டிருகிறது நிரூபனம் ஆகிறது ,,,,
“சூதாடிகளுக்கு, கொலையாளிகளுக்கு, கொல்லைகாரர்களுக்கு” பரிந்துரை அறிக்கை வழங்கினால், 1MALAYSIA-வின் தூர நோக்கமுடைய நல்ல அறிக்கை அப்படிதானே ?
நஜிப்/ஜாஹிட்டின் உரையாடல் :
நஜிப் : மொகைதீனை தெரியுமா ?
ஜாஹிட் : ஐய்யயோ ! எனக்கு தெரியாது.
நஜிப் : அப்படின்னா ! சூதாடிகளோடு பள்ளி பருவத்திலிருந்து பழக்கமா ? பக்கத்துலே உட்கார வச்ச உடனேயே “சூதாட்டத்தை” ஒழிக்கணும்னு கூவுரே ! ஜாக்கிரதை ! வாயையும் சூ….யும் பொத்திக்கிட்டு பேசாம உட்காரு.
ஜாஹிட் : ????? (மனதிற்குள் நான் என்னமோ கொலைகாரன் / கொள்ளைகாரனை சொன்னதுபோல் கோவிச்சுகிராறு)
இதெல்லாம் ஊழலால் ஊறிப்போன ஜென்மங்கள். 58 ஆண்டுகள் ஊழல் வழி சுகம் கண்டு தின்று கொழுத்து போனதினால் அதுவே நிலத்து நிற்கவே இவ்வளவும்– இவன்களின் வருங்கால சந்ததியினர் உட்கார்ந்து தின்று தின்னலாமே!
புதிய துணை பிரதமருக்கு இதுவெல்லாம் பிடிக்கவில்லை என்றால் அவர் சொந்த ஊரான இந்தோநிசிவாவுக்கு போகலாம் ! முன்பு ஒரு முறை அவர் இப்படி தான் சொன்னார் !