செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனச் சுமார் 70 பேர் கோலாலும்பூரில் தி எட்ஜ் ஊடகக் குழுமத்தின் தலைமையகத்துக்கு வெளியில் ஒன்றுதிரண்டு அதற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர்.
1எம்டிபி-யைக் குறைகூறும் செய்திகளை வெளியிட்டதற்காக தி எட்ஜ் நாளேடும் தி எட்ஜ் வார இதழும் உள்துறை அமைச்சால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
கூட்டத்தினர் “பத்திரிகையைக் கட்டுப்படுத்தாதே”, “ஊடகம் வாழ்க” என முழக்கமிட்டனர். இந்தக் கூட்டமும் ஆர்ப்பாட்டமும் ஆகஸ்ட் 8இல் நடைபெறவுள்ள மிகப் பெரிய பேரணிக்கு முன்னோட்டம்போல் அமைந்திருந்தது.
சதாம் ஹுசேன் கவிழ்ந்தது எப்படி என்று தற்போதைய நம் நாட்டு ஜனநாயகமற்ற ஆட்சிக்கு தெரியாது போலும்.
ஆவதும் நானே அழிப்பதும் நானே,எவனும் ஒன்னும் புடுங்கமுடியாதுன்னு, மண்டைகருவமாக உலாவந்துக்கொண்டிருக்கிறார்,இவனுடைய கொடுங்கோல் ஆட்சி இன்னும் எவ்வளவு காலம் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்! ………..; இல்லையென்றால் வரிந்துகட்டிக்கொண்டுப் போவோம் இல்லையேல் வரி கட்டி அழிவோம்.