மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) முன்னாள் ஆலோசகரான ஒரு ‘டான்ஸ்ரீ’-யையும் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகத்தின் அதிகாரி ஒருவரையும் போலீஸ் கைது செய்துள்ளது.
1எம்டிபி விவகாரம்மீதான சிறப்புப் பணிக்குழுவின் விசாரணை தொடர்பில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக த ஸ்டார் தெரிவித்தது.
போலீஸ், எம்ஏசிசி, பேங்க் நெகாரா, ஏஜி அலுவலகம் ஆகியவற்றைக் கொண்ட சிறப்புப் பணிக்குழு மற்றவற்றோடு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வங்கிக் கணக்கில் ரிம2.6 பில்லியன் மாற்றிவிடப்பட்ட விவகாரத்தையும் விசாரித்து வருகிறது.
ஆடி மாதம் எல்லாம் ஆடி அடங்கும் ! நல்லதையே எதிர்பார்ப்போம் !
காவல் துறை திருடனுக்காக தற்காப்பு அரண்களை ஏற்படுத்திக் கொடுப்பது நாட்டின் ஜனாயகமா?
திருடு சம்பந்தமாக எந்த செய்தியும் வெளியாகாமல் பார்த்துக் கொள்வதே காவல் துறையின் கடமையா?