முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் பற்றி வலைப்பதிவில் கருத்துரைப்பதை நிறுத்திக் கொள்ளக்கூடும். போலீசால் கைது செய்யப்படலாம் என்ற பயம்தான் காரணம்.
அவ்விவகாரம் பற்றிக் கருத்துரைப்பதே “குற்றமாக”ப் பார்க்கப்படுவதால் அதன்மீது கருத்துரைக்கப்போவதில்லை என்று நேற்று மகாதிர் கூறியிருந்ததை வைத்து இனி அவர் அதைப் பற்றி எழுத மாட்டாரா எனச் செய்தியாளர்கள் வினவினார்கள்.
“தெரியவில்லை. அதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
“போலீஸ் என்னை விசாரிக்கலாம். இப்போதைக்கு என்னைச் சிறையில் போடுவார்கள் என்று நினைக்கவில்லை. ஆனால், அதற்கான சாத்தியம் இருக்கிறது”, என முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் மைடின் எழுதிய ‘மகாதிர் என் நண்பர் அல்லர்’ என்ற நூலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது மகாதிர் குறிப்பிட்டார்.
துணைப் பிரதமர் மாறிவிட்டதால் இனி யோசித்துப் பேச வேண்டியிருக்கிறது!
பார்த்தாயா கிழவா, நீ ஆடிய ஆட்டம் காட்டிய வழி அரக்கர்களையும் குண்டர்களையும் உருவாக்கி விட்டது. இந்த நாடு இருக்கும் வரை உம்முடிய கேவலமான குறுக்கு புத்தியும் அதன் தாக்கத்தையும் நினைவில் வைத்திருப்பார். நீ செய்த இந்த பாவம் ஏழேழு ஜென்மத்துக்கும் விடாது.
சரியாகச் சொன்னார் திரு. ஜேம்ஸ் அவர்கள். மாமக்தீற்கு சரியான மூக்கறுப்பு. செய்வினையை அனுபவித்தே ஆக வேண்டும்.
காகாதிர் உன்னுடைய விசுவாசிகளே இன்று உனக்கு ஆப்பு. அன்று தமிழர் சீனர் ஒதுக்கி உன் மக்களை வளர்த்து விட்டாய். வளர்த்த கெடா இன்று முட்டுகிறது. அன்று எல்லோரையும் அரவணைத்து ஆட்சி செய்திருந்தால் இன்று இந்த நிலைமை இல்லை. அப்துல் கலாம் அனைவரையும் மதித்தார். இன்று அணைத்து இந்திய மக்களும் அவரது சேவையை பாராட்டுகின்றனர்.