குளுவாங் அம்னோ தொகுதி ஆண்டுக் கூட்டத்தில் அல்டான்துன்யா கொலை விவகாரமெல்லாம் கிளறப்படும் என்பதால் அது அனல் பறக்கும் கூட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த ஆண்டுக்கூட்டத்துக்கு வருகை புரிந்த அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசினுக்கு சிரம்பான், கோத்தா மலாக்காபோல் அல்லாது சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சுமார் 400 பேராளர்கள் கூடியுள்ள அக்கூட்டத்தில் துணைப் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட முகைதின் உரையாற்றுவார். முகைதினின் உரை ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர் மீது கூறப்படும் ஊழல்களுக்கும் அவர்முன் வைக்கப்படும் கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரும் தீர்மானமொன்றும் கொண்டுவரப்படவுள்ளது.
அத்தீர்மானம் அல்டான்துன்யா கொலை, 1எம்டிபி ஊழல், பிகேஆரின் பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி வெளிப்படுத்திய புதிய விஐபி அரசாங்க ஜெட் வினமான விவகாரம் ஆகியவற்றுக்குக் கட்சித் தலைவரின் விளக்கத்தைக் கோரும்.
எதையும் தெளிவர சொல்லாமல், செய்வதை எல்லாம் செய்துவிட்டு நான் உத்தமன், மக்கள் நலனுக்காகவே அனைத்து திட்டங்களும் என்று சொன்னால் ஐந்தறிவு கொண்ட மாக்கள் கூட எட்டி உதைக்கும்!! மக்களின் கேள்விக்கு இதுவரை நேரடியான பதில் வரவில்லையே!! குற்றம் இல்லையெனில், எதற்கு இத்தனை விசாரணைகள்? தேவையற்ற மாற்றங்கள்? பொய்யும் புரட்டும் தில்லுமுல்லுமாகவே எல்லாம் தெரிகிறது!!
அனல் பறக்கும் இந்த அடுப்படி வேலைகளையெல்லாம் நஜிப் கனல் பறக்க வைப்பார்!
எல்லாம்வேஷம் ருபடியஒன்றும்செய்யாதநீஇனிவேண்டாம் துணை பிரதமர்
பதவி
. அப்படியே
நீ வந்தாலும்
தமிழ்
பள்ளிகளை
மூடி
விட
உத்தரவு
பொடூ
வாய். போதுமடா
சாமீ
. தமிழர்களுக்கு
நீ என்ன
செய்தய்
. உன் பதவி
காலதில்
.
அமீனோ கட்சியின் ஆரம்பமும் அந்தமும் ஜோகூர் மாநிலத்தின் அரண்மனையில் தான் நடக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம் போலும்.
பின் திரையில் மலாய் மொழி இல்லாமல் போனதைப் பார்த்தீர்களா? இதுதான் மலாயன் யூனியனுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பலையின் போது இருந்த நிலை. இன்று அது மீண்டும் உருவெடுப்பது போல் தெரியுதா?
அம்னோ தலைவர்களின் தற்போதைய நிலை. நாடு எப்படி போனால் என்ன எனது பாக்கெட் நிறைய வேண்டும் அதற்க்கு எந்த அதர்மத்தையும் ஆதரிக்கும் மனப் பான்மை. மலைக்காரர்களை பற்றியோ, மலேசியர்களை பற்றியோ சிறிதும் அக்கறை இன்மை. மலாய்க்காரர்கள் உரிமைக்கு போராடுகிறோம் எனும் போலியான பேச்சு. அதனை நம்பவைக்க குட்டித் தலைவர்களுக்கும் இனவாத அரசியல் சார்பற்ற இயக்கங்களுக்கும் மறைமுக பண ஆதரவு ( லவ் யாட் சம்பவம் ). மலைக்காரர்களோ அம்னோ தங்களை உரிமையை பாதுகாப்பதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு உதவி எனும் பேரில் பிச்சை போடப் படுகிறது. இதன் உண்மை தெரியும் போது அவர்கள் பாதாளத்திற்கு தள்ளப் பட்டிருப்பார்கள். தரப் போதைக்கு 99.9% தலைவர்கள் எல்லோரும் ஊழல் பேர்வழிகள்.ஆகையால் எந்த தவற்றையும் தட்டிக் கேட்க கேட்பதில்லை அல்லது கேட்க முடிவதில்லை. கிழவனின் காலந் தொட்டு நல்ல திறமையான தலைவர்களை உருவாக்க வில்லை , இஉர்ந்தவ்ர்கலையும் வாழவிட வில்லை. வினை வைத்தவன் வினை அறுப்பான். இப்போது கிழவனுக்கு அறுவடை காலம்.
முகாடின் அன்று பதவியில் இருத்த பொழுது இண்டர்லோக் வலுகட்டாயமாக தினிபதற்கு முயற்சி செய்தது மறக்க இயலாதது.இன்று உத்தமன் போல் நடிக்க வேண்டாம்.உன்னுடைய துரோகம் தமிழர்களுக்கு தெரியும்.
இந்த அம்னோவின் அரசியல் போராட்டத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் .இது நம் மக்களுக்கு மேலும் துயரங்களை கொடுக்கும் .எனவே இந்த போராட்டம் உடனே முடிவுக்கு வர வேண்டும்