மகாதிர்: ஐஆர்பி பிரதமர் கணக்கைச் சோதித்ததா?

dr mபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கணக்கில்  யுஎஸ்$700மில்லியன்  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படுவதை  உள்நாட்டு  வருமான  வரி  வாரியம் (ஐஆர்பி)  அறியுமா  எனக்  கேள்வி  எழுப்பப்பட்டுள்ளது.

கேள்வி  எழுப்பியவர்  முன்னாள் பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். இன்று தம் வலைப்பதிவில்  அக்கேள்வியை  எழுப்பிய  மகாதிர், வருமான  வரி   வாரியத்தின்  சோதனைக்கு  ஆளான  அனுபவம்  தமக்கும்  உண்டு  என்றார்.

1964, 1969  பொதுத்  தேர்தல்களின்போது  வேட்பாளர்களுக்குப்  பட்டுவாடா  செய்யப்படுவதற்காக  அம்னோ  தலைமையகம் ரிம20,000  என்னிடம்  கொடுத்தது.

“ரிம20,000-த்தை  ரொக்கமாக  வைத்துக்கொள்ள  நான்  விரும்பவில்லை. பணத்தை  என் கணக்கில்  போட்டுவிட்டு  தேர்தல்  குழுக்களுக்குச்  காசோலைகளை  வரைந்தேன்.

“இந்தப்  பணமும்  கொடையாளிகள்  கொடுத்ததல்ல. அம்னோ கொடுத்தது. அதைத் (அம்னோ) தொகுதிகள்  அவற்றின்  வேட்பாளர்களுக்காகப்  பயன்படுத்திக்  கொண்டன.

“1970-இல்  நான்  கட்சியிலிருந்து  நீக்கம்  செய்யப்பட்டபோது  ஐஆர்பி  என் வீட்டையும்  மருந்தகத்தையும்  சோதனை  இட்டது. காசோலையின்  அடிக்கட்டையைக்  கண்டெடுத்து  நான்  என்னுடைய  வருமானத்தை  அறிவிக்கவில்லை  எனக்  கூறினர்”.

அதன்  விளைவாக  அவருக்கு  ரிம130,000 அபராதம்  விதிக்கப்பட்டு  தவணை  முறையில்  அபராதத்  தொகையைச்  செலுத்தியதாகக்  குறிப்பிட்டார். துணை  அமைச்சராக  இருந்த  காலம்வரை அவர்  அதைச்  செலுத்த  வேண்டி இருந்ததாம்.

“எனக்குக் கொடுக்கப்பட்ட  ரிம20,000-த்துக்கும்  நஜிப்பின்  கணக்கில் போடப்பட்டிருப்பதாகக்  கூறப்படும்  யுஎஸ்$700 மில்லியனுக்குமிடையில் மிகப்  பெரிய  வேறுபாடு  இருக்கிறது”, என  மகாதிர்  கூறினார்.