துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “கதை கட்டுவோர்”மீது எச்சரிக்கையின்றியே நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
“இது எச்சரிக்கை இல்லை. எச்சரிக்கை இன்றியே நடவடிக்கை எடுப்பேன். அதற்கு நீங்கள் கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும்.
“எதையும் இட்டுக்கட்டிக் கூறாதீர்க்கள். இதுதான் ஜாஹிட் ஹமிடி, சரியா?”, என உள்துறை அமைச்சருமான ஜாஹிட் கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.
செய்திகள் ஒழுங்குமுறையாக இருக்க வேண்டும். உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றவர் கூறினார்.
“ஒழுங்குமுறைக்கு மதிப்பளிக்க வேண்டும். உண்மையை அடிப்படையாகக் கொண்டு எழுத வேண்டும். திரித்து மட்டும் கூறவே கூடாது”, என்று ஜாஹிட் கூறினார்.
மக்களின் பணத்தை சூரையாடுவோர் மீது ஆமை வேகத்தில் நடவடிக்கை எடுப்பீரோ? ஆணவம் தலைமேல் கொடி கட்டிப் பறக்குது போல இருக்கு. ஓட்டை விழுந்த இந்த கப்பல் ரொம்ப நாளைக்கு நீடிக்காது மவனே. வேண்டாம் இந்த ஆணவத் திமிர்.
“மின்னல்வேக நடவடிக்கை” என்றால் எப்படி ?
“1MDB” பணம் பிரதமர் வங்கி கணக்குக்கு கைமாறியது போலவா ? அல்லது “1MDB” விசாரணை போலவா ?
MH 370 விமானம் காணாமல் போனது மற்றும் கொலை குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பி சென்றது போன்றவை தங்களது “மின்னல்வேக நடவடிக்கை”-யால்தான் என்று உலகமே வியக்கிறது.
எல்லா விசாரணைகளும் தேவையற்ற இடர்கள், இழுபறி உள்ள வேளையில், எது கதை எது உண்மை என்று யாருக்குத் தெரியும்???
கவலையை விடு உனக்கு கூடிய சீக்கிரம் இதற்கு தகுந்த சன்மானம் கிடைக்கும்.
நீங்கள் மின்னல் வேகத்தில் போவிர்களோ அல்லது ஆமை வேகத்தில் போவிர்களோ எங்களுக்கு தெரியாது.. அந்த பணம் எப்படி நம் நாட்டிற்குள் என்று விளக்கினால் போதும்….
பாகன் டட்டொ தொகுதி தமிழர் வாக்காளர்களே உங்களுக்கு சூப்பர் நாடாளுமன்ற உறுப்பினர் கிடைத்துள்ளார்.குதிரை வேகத்தில் செயல்பட்டு நாட்டில் நடக்கும் அடுளியங்கள் துடைதொளிப்பார்.நாடு சிங்கப்பூர் அளவுக்கு மாறிவிடும்.நம்பிக்கையில் இதுவும் ஒன்று.சூப்பர் சூப்பர்.
இவ்வங்கத்தில் கருத்துக் கூறுவோரின் பதிவுகள் தெளிவாக ,சுருக்கமாக, நறுக்கென்று உள்ளது. அருமை. 1-8-2015ல் சோகோ அருகில், நஜிப் பதவி விலகவேண்டும் என கூட்டம் போடப்பட்டது. அதில் 29 பேர் பிடிப்பட்டனர். 8 பேர் டி.எ.பி. யை சேர்ந்தவர்கள். மறுநாள், இவர்களை விடுவித்த, டி.எ.பி.யின் கோபிந்த் சிங், அனைவருக்கும் ஓர் அருவுரை கூறியிருந்தார். பெஸ்பூக், ட்விட்டர், மற்றும் இணையதளங்களில் அரசிற்கு எதிராக கருத்துக் கூறுவோர் கவனமுடன் செயல்லாற்றுங்கள் என்றார். எந்நேரமும் இவர்களுக்கு ஆபத்து காத்துள்ளது என்றார். ஆகவே, பயப்படத் தேவையில்லை, ஆனாலும் கவனமாக கருத்துக் கூறுங்கள்.
யோவ்! பாகான் டத்தோ தொகுதியில் தமிழர்களின் ஓட்டில் இவன் வெற்றி பெறவில்லை மாறாக இவனுக்கு கூஜா தூக்குகின்ற ஒரு தேவுடா கூட்டமும் அஞ்சல் வாக்கும் இவனை கடைசி நேரத்தில் காப்பாற்றியது. இது இன்றைக்கு ஆணவம் புடிச்சு அழிகின்றதைப் பாரு!.
உண்மையை எழுதினால்தான் பிடிச்சி உள்ள போட்டிரிங்களேன்,,,,
கதை கட்டுவோர் மீது மின்னல் வேகத்தில் நடவடிக்கை! கத்தைக் கத்தையாகத் திருடுவோர் மீது நத்தை வேகத்தில் நடவடிக்கை! நல்ல ஜால்ரா!
இது ஒரு கூறு கெட்ட கம்மனாட்டி. இவனை எல்லாம் துணை பிரதமன் ஆக்கி தன்னுடைய ஆட்சியை தங்கவைத்து கொள்ள பிரதமன் செய்யும் சூழ்ச்சி மிக பிரமாதம்.
ஐய்யயோ எனக்கு ரொம்ப பயமா இருக்கு ! முந்திரி “மின்னல் வேக நடவடிக்கை” எடுத்துவரோன்னு ! என்ன உனக்குத்தான் பேச தெரியுமா ?
மக்களும் “மின்னல் வேக நடவடிக்கை” எடுக்க ஆரம்பித்தால் அடுத்த பொதுதேர்தலுக்கு பின் முந்திரி “KAPAL LAYAR”-ரில் (தேசிய முன்னணியின் ஆதிகால சின்னம்) ஏற்றி அவரது பூர்வீக நாடான இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைக்கவும் தயங்க மாட்டார்கள்.