பொதுக் கணக்குக் குழுவின் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் பின்னர் அது நடைபெறும் என்றும் 1எம்டிபி-க்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இன்று, நிதி அமைச்சின்வழி நாடாளுமன்ற பிஏசி செயலாளரிடமிருந்து 2015 ஆகஸ்ட் 4, 5, 6, 17, 18 ஆகிய நாள்களிலும் செப்டம்பர் 8, 10-இலும் நடைபெறவிருந்த பிஏசி விசாரணை தள்ளிப் போடப்பட்டிருப்பதாகவும் விசாரணைக்கான நாள்கள் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை கிடைக்கப்பெற்றது.
“பிஏசிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் புதிய நாள்களில் விசாரணைக்கு வரவும் தயாராக இருக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்”, என எம்டிபி தெரிவித்தது.
எல்லாவற்றையும் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவான்கள்– இது தான் எப்போதும் நடக்குமே இந் நாட்டில். சீனா போல் நிற்க வைத்து சுடவேண்டும்.
”அவகாசம் தேவை எல்லா கேள்விக்கும் உடனே பதில் சொல்ல முடியாது. நானும் எப்படி தப்பிக்கிறத்துனுயோசிக்கவேன அதுக்குதான் அவகாசம் கேட்கிறேன்.
எதை எதை எப்படி முடக்கினா தப்பிக்கலாம் என்ற மந்திரத்தை இவனுக்கு சொல்லிக் கொடுத்து ஆட்டுவிக்கின்ற பூசாரி யாரு என்று முதலில் கண்டு பிடியுங்க.
நாடாளுமன்ற ஆணையின் பேரில் உருவான PAC குழுவின் அதிகாரிகளை அமைச்சர்களாக்கியது என்ன துரோகம், அநீதி ? சட்ட நடவடிக்கை எடுக்க யாரும் இல்லையா? அல்லது முடியாதா ?
பொது கணக்கு குழு “1MDB” விசாரணையை தொடர்ந்தால் என்ன ? தொடராவிட்டால் என்ன ?
2.6 பில்லியன் நஜிப் கணக்கில் சேர்க்க பட்டது உண்மைதான், அது நன்கொடை என்று “SPRM” உறுதி படுத்தியுள்ளபோதும், அந்த நன்கொடையாளர் யார் என்று தேரிவிக்காதலால், நன்கொடையாளர் ஒரு போதை பொருள், ஆயுதம் கடத்தல் அல்லது பயங்கரவாத கும்பலை சேர்ந்தவராகவும் இருக்கலாம் என மக்கள் சந்தேகக்கிறார்கள். நஜிப்தான் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு கொள்வதில் வல்லவராயிற்றே (உதாரணம் PHILIPPINES அரசாங்கத்திற்கும் அந்நாட்டு பயங்கரவாதிகளுக்கும் நடுவராக பணியாற்றியது, MH 17 விமான பேரிடரில் நேரிடையாக பயங்கரவாதிகளிடம் பேரம் பேசியது).
முதலில் அரசாங்கத்தால் “வதந்திகள்” என பிரகனபடுத்தப்படும் அனைத்து செய்திகளும் பின்னர் அவை யாவும் “உண்மையே” என அரசாங்கம் ஒத்து கொள்வது நமக்கு ஒன்றும் புதிதல்லவே !
இப்படிப்பட்ட காட்சிகளை ஏற்கனவே “சிவாஜி” திரைப்படத்தில் பார்த்து விட்டதால் “கிளைமாக்ஸ்” காட்சிக்கு சுவராஸ்யம் இல்லாமல் போய்விட்டது.
நேற்று 2/8/15 Hakam நடத்திய டெமி Rakyat என்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டேன். Bersih # 4 நகர்வின் திட்டங்களோடு கடந்த 28/7/15 நடந்த திட்ட நடவடிக்கை பற்றி விவாதங்கள் நடந்தன.இவர்களுடன் PROHAM , மற்றும் NegaraKU இயக்கமும் இருந்தனர். நஜிபின் 2.6 பில்லியன் SPRM 2.6 பில்லியன் சமீப விளக்க கடிதம் அதாவது அது நஜிபுக்கு நன்கொடையாக கிடைத்தது ஆக நடவடிக்கை இல்லை அத்தோடு இது பற்றி யாரும் இனி பேசக்கூடாது என்ற SPRM கூற்றை
நக நக என்று நகைத்தோம். PAC யில் இருந்த அதிகாரிகளை அமைச்சர்களாக்கிய விதையை ஆராய்ந்தோம்.
நஜிப் அவர்களின் நிதி அமைச்சு , உள் துறை அமைச்சு பாதுகாப்பு அமைச்சு என்ற மூன்று முக்கிய அமைச்சின் முதலை தனத்தை பேசினோம். Bersih நடத்த்தப்போவத்தின் பிற 10 சரத்துகளை / 2.6 பில்லியன் வந்த மாயம் இருக்கும் மாயம் என்ன என்று கேற்க மக்கள் கூட வேண்டும். நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளும் வர வேண்டும் …நீதி கேட்டு மகாதீரும் முகிடின் இருவரும் கலந்துக கொள்ள வேண்டும் என்ற ஆசையும் …இந்த நிலையில் இடைக்கால “தேசிய அரசு” உருவாக வேண்டும் என்ற மக்களின் ஆசையும் பேசப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்களுடன் அடுத்தக கூட்டம் நடக்கும்.