பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்தக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரிம2.6 பில்லியன் அம்னோ ஆதரவாளர்கள் வழங்கிய பணம் என்கிறார் கட்சியின் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்.
“நான் அறிந்தவரை அது ஆதரவாளர்களும் கொடையாளர்களும் வழங்கிய பணமாகும்.
“அது கொடையாளர்களிடமிருந்தும் ஆதரவாளர்களிடமிருந்தும் கிடைத்த நன்கொடை என எம்ஏசிசி கூறியிருப்பதே எங்களின் நிலைப்பாடுமாகும்”, என்று கைரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று, எம்ஏசிசி ரிம2.6 பில்லியன் 1எம்டிபி-இன் பணமல்ல என்பதும் அது நன்கொடையாகக் கிடைத்த பணம் என்பதும் புலனாய்வில் தெரிய வந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது.
எம்ஏசிசி இப்படியொரு அறிக்கை வெளியிட்டது பலருக்கும் வியப்பளித்தது. ஏனென்றால், அது இதற்குமுன் இந்த விவகாரத்தைத் தான் ஆய்வு செய்யவில்லை என்றும் 1எம்டிபி-இன் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேசனல் விவகாரத்தை மட்டுமே விசாரித்து வருவதாகவும் கூறியிருந்தது.
பெரிய புசணிக்காயை இவனுங் களைப்போல் வேறு யாராலும் முழுங்க. மறைக்க முடியாதுங்க!
நீங்கள் கொடையாகக் கூட கொடுப்பீர்களோ? வாங்கித்தானே உங்களுக்குப் பழக்கம்! அம்னோகாரன் கொடுத்தான் என்று சரித்திரம் இல்லையே!
இந்நாட்டிலுள்ள UMNO ஆதரவாளர்களா ? அல்லது வெளிநாட்டில் வாழும் UMNO ஆதரவாளர்களா ? என விளக்கமாக கூற முடியுமா ? இந்நாட்டிலுள்ள UMNO ஆதரவாளர்கள் 2.6 பில்லியன் “நன்கொடை” கொடுக்க முடியுமளவுக்கு இவர்களின் வருமான கணக்குகளை IRB சோதனை செய்ய வேண்டும்.
வெளிநாட்டு UMNO ஆதரவாளர்கள் என்றால் இவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று விசாரிக்க INTERPOL-லின் உதவியை நாட வேண்டும். ஏனென்றால், வெளிநாட்டில் பல மலேசியர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்ய பட்டிருப்பதாக சில மாதங்களுக்கு முன் பத்திரிக்கைகளில் செய்திகள் பரப்பரப்பாக வெளியிடபட்டன. ஆகையால், இந்த போதை பொருள் கடத்தலில் வெளிநாட்டு UMNO ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என மக்களிடையே எழுந்துள்ள வலுவான சந்தேகத்தை தீர்க்க, வெளிநாட்டு UMNO ஆதரவாளர்ள்/ நன்கொடையாளர்கள் யார் ? 2.6 பில்லியன் நன்கொடை கொடுக்கும் அளவுக்கு என்ன தொழில் செய்கின்றனர் ? என்ற விவரங்களை UMNO விளக்க கடமை பட்டுள்ளது.
UMNO இதற்கு விளக்கம் தர முடியா விட்டால், வெளிநாட்டு UMNO ஆதரவாளர்ள் சட்ட விரோத தொழில் மூலம் கிடைத்த பணத்தை “நன்கொடை” என்ற பெயரில் அதுவும் பிரதமர் உதவியோடு “பண சலவை” செய்கிறார்களோ என்ற மக்கள் சந்தேகத்திற்கு வலு சேர்ப்பதாக ஆகிவிடும்.
சாயா புண் அட தர்ம வாங் சாக்கு ரம் 260000
Mr.kairi when the donation was banked in Najibs account?
அம்னோ ஆதரவாளர்கள் வழங்கிய பணமா ?? அப்படி என்றால் அந்த ஆதருவாளர் கூறு முட்டைக்கு எங்கிருந்து வந்தது அந்த பணம் ?? அட முட்டாபயலே ,படுவா ராச்க்கள் ,,நாங்க கேனையனா ??
இந்த தொகை அம்னோ நன்கொடையாளர்களிடமிருந்தும்
ஆதரவாளர் களிடமிருந்தும் வந்தது என்று சொல்ல ஏன் இத்தனை நாட்கள்?? தேவையற்ற விசாரணைகள், பதவி விலகல்கள்?? அமைச்சரவை மாற்றம்?? பெருந்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது மத்திய வங்கிக்கு தெரியுமா???
ஆஹா என்ன மஹா நடிப்பு. போதுமடா உங்கள் நடிப்பு. இந்த ஆண்டு நடிப்பு மன்னன் பட்டம் உங்களுக்கு வழங்கலாம்.