ரிம2.6 பில்லியன் ‘நன்கொடை’ மீது இணையத்தில் கிண்டல்கள், கேலிகள்

netizenபிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  வங்கிக்  கணக்கில்  போடப்பட்ட  ரிம2.6 பில்லியன்  நன்கொடைகளாகக்   கிடைத்த  பணம்  என்று  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்  அறிவித்திருப்பதை  இணைய  மக்கள்  டிவிட்டரிலும்  முகநூலிலும்  பலவகையாகக்  கிண்டல்  செய்திருக்கிறார்கள்.

பெரும்பாலான  பதிவுகள்  நஜிப்பைக்  குறைகூறுகின்றன. அப்படிக்  குறை  கூறுவோர்மீது  நடவடிக்கை  எடுக்கப்படும்  என  துணைப்  பிரதமர்  அஹ்மட் ஜாஹிட்  ஹமிடி  எச்சரிக்கை விடுத்திருப்பதை  அவர்கள்  பொருட்படுத்தியதாக  தெரியவில்லை.

பலர், அப்பணம்  எங்கிருந்து  வந்தது  என்பதைத்  தெரிந்துகொள்ள  விரும்பினார்கள். இன்னும்  பலர்  எம்ஏசிசி-இன்  அறிக்கையைக்  கேலி  செய்வதுபோல்  நஜிப்பிடமே  நன்கொடை  கேட்டிருக்கிறார்கள்.

பதுவுகளில்  மாதிரிக்குச்  சில:

@1Obefiend – ஐயா  நஜிப், உங்களின்  கதை  அமைப்பாளர்கள்  Stephanie Meyers (Twilight நாடகத்  தொடர்  எழுத்தாளர்) போன்று  திறன்படைத்தவர்கள்.
@jmy_83  ஐயா  நஜிப், நான் அம்னோ  ஆதரவாளன். நீங்கள்  பதவி  விலக  வேண்டும். அம்னோவின்  ஆதரவோ  மலேசியர்களின்  ஆதரவோ  இனியும்  உங்களுக்கு  இல்லை. உங்கள்மீது  நம்பிக்கை  போய்விட்டது.

Alan A Alexandar என் பிடிபிடிஎன் கடனைக்  கட்ட  முடியுமா…

@DaphCLPT  மக்களே  உங்களுக்குப்  படியளக்க  நஜிப்பிடம்  பணமில்லை. எல்லாம்  13வது  பொதுத்  தேர்தலுக்குப்  பயன்படுத்தப்பட்டு விட்டது.