நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவிற்கு (பிஎசி) புது உறுப்பினர்களை நியமிப்பதற்கு நாடாளுமன்றம் அவரசக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினரும் டிஎபியின் மூத்த தலைவருமான லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டம் மெர்தேக்கா தினமான ஆகஸ்ட் 31 க்குள் நடத்தப்பட வேண்டும் என்றாரவர்.
பிஎசியின் நான்கு உறுப்பினர்களை, அதன் தலைவர் உட்பட, அரசாங்கப் பதவிகளுக்கு நஜிப் நியமித்ததைத் தொடர்ந்து அக்குழு மேற்கொண்டிருந்த 1எம்டிபி மீதான விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. அக்குழுவுக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் அது விசாரணையைத் தொடர முடியாது என்று மக்களவைத் தலைவர் அறிவித்துள்ளார்.
பிரதமர் நஜிப் அவர் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்று கிட் சியாங் மேலும் கூறினார்.
அடிமட்டத்திலிருந்து எழும்பும் உண்மையான குரல்களுக்கு செவி சாயுங்கள் என்று தாம் பிரதமருக்கு ஆலோசனை கூறுவதாக லிம் தெரிவித்தார்.
அவசரம் என்றால் “கக்கூசைத்” தான் காட்டுவார்கள்! அது தான் நன்கொடை என்று சொல்லி யார் அந்த கொடைவள்ளல் என்று கை காட்டி விட்டார்களே! இன்னுமா அவசரம்?
ஐயா லிம் அவர்களே, என்னதான் கத்தினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் ஆகும். இந்த 1MDB விசாரணை, PAC பொது கணக்கறிக்கைக் குழு விசாரணை உட்பட அனைத்தும் தடை பட வேண்டும் என்பதற்காகத்தானே இத்தனை நாடகங்கள்!! இருப்பினும், உண்மைக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் நீங்கள் தொடருங்கள் உங்கள் கடமையினை!! ஆளும் அரசாங்காம் உட்பட, (குறிப்பாக போலிஸ்), எம் எ சி சி மற்றும் AG அலுவலகம் மற்றும் ஒரு சில சட்ட அமுலாக்க இலாக்கா மீது மக்கள் நம்பிக்கையை முற்றாக இழந்து அதிர்ப்தி கொண்டுள்ளனர். சரியான விளக்கமோ நடவடிக்கையோ காணும் வரை கேள்வி அம்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்!!!
எங்கப்பா இருக்கு அந்த நாடாளுமன்றம்?
கத்திகொண்டே இருங்கள் திருடர்களுக்கு விளங்குதா என்று பார்போம் !!!