ரிம2.6பில்லியன்: கொடுத்தவர் பெயர் இரகசியம்

Donor name secret.1jpgபிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6பில்லியன் எங்கிருந்து வந்ததது என்பதற்கான விளக்கத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெற்றுள்ளது .

ஆனால், மத்தியக்கிழக்கிலிருந்து வந்த அப்பணத்தை கொடுத்தது யார் என்பதை வெளியிட முடியாது என்று அந்த ஆணையம் கூறுகிறது.

பிரதமர் கணக்கில் அப்பெருந்தொகையை வைத்த நன்கொடையாளர் சம்பந்தப்பட்ட விபரங்களை வங்கி ஆவணங்களிலிருந்து எடுக்கப்பட்ட நான்கு கடிதங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

“அந்த ஆவணங்களில் ரிம2.6பில்லியன் நன்கொடை என்று கூறப்பட்டுள்ளது”, என்று ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இது பற்றிய பிரதமரின் விளக்கத்தைப் பெறுவதற்கு ஆணையம் அடுத்து அவரிடம் கேள்விகள் கேட்கும்.

ஆனால், இந்த அறிக்கையில் ஆணையத்தின் அதிகாரிகள் எவரும் கையெழுத்திடவில்லை. ஆணையத் தலைவர் அபு காசிம் முகமட் தற்போது விடுப்பில் இருக்கிறார். துணைத் தலைவர் முகமட் ஸூக்ரி வெளிநாட்டில் இருக்கிறார்.