எம்டிபி சிறப்புப் பணிக்குழு இனிமேலும் தேவையில்லை

 

no need1எம்டிபி விவகாரத்தை விசாரித்து வந்த சிறப்புப் பணிக்குழு இனிமேலும் தேவையில்லை என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்துறை தலைவர் முகம்மட் அப்பாண்டி அலி ஆலோசனை கூறியுள்ளார்.

ஆகவே, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்எசிசி) சட்டத்துறை தலைவரின் ஆலோசனைப்படி அதன் சொந்த அறிக்கையை வெளியிடுகிறது.

சட்டத்துறை தலைவரின் ஆலோசனைப்படி சிறப்புப் பணிக்குழு தேவையில்லை. ஆனால், விசாரணையை மேற்கொண்டுள்ள அரசாங்க அமைப்புகள் தங்களுடைய பணியை சட்ட அடிப்படையில் மேற்கொள்ளலாம் என்று சட்டத்துறை தலைவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

“எம்எசிசியைப் பொறுத்தவரையில், அது எஸ்ஆர்சி இன்டர்நேசனல் மற்றும் ரிம2.6பில்லியன் குறித்து விசாரிக்கிறது. அவ்விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது”, என்று எம்எசிசி அறிக்கை மேலும் கூறுகிறது.