ஸைட் அறைகூவல்: நஜிப்பிற்கு எதிராக 100,000 மக்கள் பங்கேற்கும் பேரணி

 

Rallyagainstnajibபிரதமர் நஜிப்பிற்கு எதிராக ஓர் இலட்சம் மக்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடத்த வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் அறைகூவல் விடுத்துள்ளார்.

அனைத்து பின்னணிகளை யும் கொண்ட 100,000 மக்கள் பங்கேற்கும் ஒரு பேரணியை அமைதியாக பிரதமர் நஜிப்பிற்கு எதிராக நடத்த வேண்டும் என்று அவர் தமது வலைத்தலத்தில் இன்று பதிவு செய்துள்ளார்.

ஆகஸ்ட் 31 க்கு முன்னதாக இப்பெரும் பேரணியை நடத்துவதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி ஓர் அரங்கத்திற்கும் இதர வசதிகளுக்கும் ஏற்பாடு செய்வார் என்று தாம் நம்புவதாக ஸைட் கூறினார்.

டாக்டர் மகாதிர் மற்றும் லிம் கிட் சியாங் போன்ற அரசியல் வைரிகளும் தங்களுடைய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஒன்றிணைந்து1 zaid நிற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“மகாதிர், கிட் சியாங், (பிகேஆர் தலைவர்) டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில், (முன்னாள் துணைப் பிரதமர்) முகைதின் யாசின், (முன்னாள் பாஸ் துணைத் தலைவர்) முகமட் சாபு, அஸ்மினும் இதரரும் மேடையில் ஒன்றாக நின்று தங்களுக்கிடையில் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் மலேசியாவை காப்பாற்றுவதற்காக அவர்கள் ஒன்றிணைவர் என்று அறிவிக்க வேண்டும்.

“இத்தலைவர்கள் நாட்டின் செல்வத்தை திருடுகிறவர்களையும் சூறையாடுகிறவர்களையும் தப்பிக்க விடக்கூடாது.

“அவர்கள் ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் ஆகியவற்றுக்கு எதிராக ஒற்றுமையின் வலிமையை மக்களுக்கு காட்ட வேண்டும். அவர்கள் நமது காவல்துறை மற்றும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் ஆகியவற்றின் மீதான நமது நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்”, என்று ஸைட் இப்ராகிம் வலியுறுத்திக் கூறினார்.

பெர்சே 4.0 ஆகஸ்ட் 29-30 இல் இது போன்ற ஓர் இரவு முழுமைக்குமான பேரணிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. நஜிப்பை பதவி விலகக் கோருவது அதன் நோக்கமாகும்.