‘தேடப்படும்’ கிளேய்ருக்கு யுகே போலீஸ் பாதுகாப்பு

rewcastleமலேசிய  போலீசார்  கைது  செய்ய  விரும்பும்  சரவாக்  ரிப்போர்ட்  தலைமைச் செயலாளர் கிளேர்  ரியுகாஸல்  பிரவுனுக்கு  பிரிட்டிஷ்  போலீசார்  பாதுகாப்பு  வழங்கியுள்ளனர்.

மலேசிய  ஊழல்  விவகாரத்தை  ஆய்வு செய்ததற்காக  தாம்  பின்தொடரப்படுவதாகவும்  படமெடுக்கப்படுவதாகவும்  ரியுகாஸல்  புகார் செய்ததை  அடுத்து  அவருக்குப்  போலீஸ்  பாதுகாப்பு  கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரியுகாஸலிடமிருந்து  புகார்  பெற்றதை  ஸ்காட்லாந்த்  யார்ட் உறுதிப்படுத்தியதாக  யுகே  நாளேடு  தி  இண்டிபெண்டெண்ட்  அறிவித்துள்ளது.

சிலர்  கார்களில்  அமர்ந்துகொண்டு  தம்  வீட்டை  நோட்டம் இடுவதாகவும்  ரியுகாஸல்  தெரிவித்ததாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன்  தொடர்புகொண்டவர்கள்   கைது  செய்யப்பட்டிருக்கிறார்களாம்.

“(கிட்டதட்ட)  எல்லாருமே  கைது  செய்யப்பட்டிருக்கிறார்கள்”, என்றவர்  கூறியதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நஜிப் அப்துல்  ரசாக்கின்  சொந்த வங்கிக்  கணக்கில்  ரிம2.6 பில்லியன்  போடப்பட்டதாகக்  கூறப்படும் விவகாரத்தை  சரவாக்  ரிப்போர்டும்  வால்  ஸ்திரிட் ஜர்னலும்தான்  முதன்முதலாக  வெளிச்சத்துக்குக்  கொண்டு வந்தன.