எதிரணித் தலைவர்கள் எம்ஏசிசி-க்கு ஆதரவு

supportஎதிரணித்  தலைவர்கள்  இன்று மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணைய(எம்ஏசிசி)  தலைமையகம்  சென்று எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனத்தின்மீது  விசாரணை  நடத்துவதற்காக  அழுத்தத்துக்கு  இலக்காகியுள்ள  அந்த  ஆணையத்துக்கு  ஆதரவு  தெரிவித்துக்  கொண்டனர்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின் தனிப்பட்ட  வங்கிக்  கணக்கில் போடப்பட்டதாகக்  கூறப்படும்  ரிம2.6 பில்லியனில்  ரிம42 மில்லியன்  எஸ்ஆர்சி  இண்டர்நேசனலிலிருந்து  வந்ததாகும்.

எம்ஏசிசி  விசாரணையாளர்கள்  சிலர்  அண்மையில் போலீசால்  கைது  செய்யப்பட்டார்கள். அவர்களின்  வீடுகளும்  அலுவலகமும்  சோதனையிடப்பட்டன.

இவ்வாறு  பல தொல்லைகளுக்கு ஆளாகியுள்ள  அவர்களுக்கு  ஆதரவு  தெரிவிக்கவும்  அவர்களுடன்  ஒன்றுபட்டிருப்பதைக்  காண்பிக்கவும் எதிரணியினர்  அவர்களின்  தலைவர்  வான்  அசீசா  வான் இஸ்மாயில்  தலைமையில்  சென்றிருந்தனர்.

அவருடன்  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங், பிகேஆர்  உதவித்  தலைவர்கள்  ரபிஸி  ரம்லி, ஷாம்சுல்  இஸ்கண்டர்,  கெராக்கான் பாரு  தலைவர்  முகம்மட்  சாபு,  முன்னாள்  அமைச்சர்  ஜைட்  இப்ராகிம்  முதலானோரும்  காணப்பட்டனர்.

அவர்களை  வரவேற்ற  எம்ஏசிசி  வியூகத்  தொடர்பு  இயக்குனர்  ரொஹாய்ஸாட்  யாக்கூப்,  அவர்களின்  ஆதரவுக்கு  நன்றி  தெரிவித்தார்.

“எம்ஏசிசி-க்கு  ஆதரவு  தெரிவித்த உங்களுக்கு  மிக்க  நன்றி.

“நாங்கள்  எங்கள் கடமையை  எப்போதும்  நேர்மையாகவும்  வெளிப்படைத்தன்மையுடனும்  செய்வோம்”, என்றாரவர்.