7 மாதங்கள் ஆகியும் கீர் தோயோ வழக்கில் தீர்ப்பைக் காணோம்

khirஆகஸ்ட்  19  வந்தால்  ஏழு  மாதமாகும். ஊழல்  வழக்கில் குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்ட  சிலாங்கூரின்  முன்னாள்  மந்திரி  புசார்  டாக்டர்  முகம்மட்  கீர்  தோயோ-வின்  மேல்முறையீடு மீது    கூட்டரசு  நீதிமன்றம்  இன்னும்  தீர்ப்பு  வழங்காதிருக்கிறது.

கூட்டரசு  நீதிமன்றம்  தீர்ப்பு  வழங்க  நாள்  எதுவும்  இன்னும்  வரையறுக்கப்படவில்லை  என்றும்  தெரிகிறது.

அவ்வழக்கை  விசாரிக்கும்  ஐந்து  நீதிபதிகளில்  ஒருவரான  நீதிபதி  டான்  கொக் வா,  மே  16-இல்  பணி ஓய்வு  பெற்றிருக்க  வேண்டும்.  ஆனால், அவரது  பணிக்காலம்  ஆறு  மாதம்  நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நீட்டிப்புக்  காலத்திலும்  மூன்று  மாதங்கள்  முடியப்  போகின்றன.

கீர், டிடாமாஸ்  நிறுவன இயக்குனர்  ஷம்சுடின்  ரொஹானியிடமிருந்து  ரிம3.5 மில்லியனுக்கு  வீடு  வாங்கிய  விசயத்தில்  ஊழல்  புரிந்திருக்கிறார்  என  ஷா  ஆலம்  உயர்  நிதீமன்றம் 2011  டிசம்பர் 23-இல்  தீர்ப்பளித்தது. டிடாமாஸ்  2004-ல் ரிம6.5 மில்லியன்  கொடுத்து வாங்கிய  வீடு  அது.

முறையீட்டு  நீதிமன்றமும்  கீர்  குற்றவாளியே  என்றதுடன்  அவருக்கு வழங்கப்பட்ட  12மாதச்  சிறைத்தண்டனையையும் சொத்தைப்  பறிமுதல்  செய்ய  வேண்டும்  என்ற  தீர்ப்பையும்  நிலைநிறுத்தியது.